Headlines

அமைச்சர் கே. வேலாயுதம் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்

அஸ்ரப் ஏ சமத் பெருந்தோட்ட நிறுவணங்களின் இராஜாங்க அமைச்சர் கே. வேலாயுதம் செத்சிரிபாயவில் உள்ள 8ஆம் மாடியில் உள்ள பெருந்தோட்ட அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றக் கொண்டார். இந் நிகழ்வில் இவ் அமைச்சுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட செயலளார் விஜயலக்சுமி மற்றும் கல்வி பிரதியமைசச்ர் ராதக் கிருஸணனும் கலந்து கொண்டார்.

Read More

தீவிரவாதப் பட்டியலில் இருந்து ஹமாஸ் ஐ நீக்கும் தீர்ப்புக்கு ஐரோப்பிய யூனியன் எதிர்ப்பு!

உலகத் தீவிரவாத அமைப்புக்களின் பட்டியலில் இருந்து ஹமாஸ் ஐ நீக்க சமீபத்தில் ஐரோப்பிய யூனியனின் நீதிக்கான உயர் நீதிமன்றம் டிசம்பரில் தீர்மானம் மேற்கொண்டது. ஆனால் ஐரோப்பிய யூனியன் இதற்குச் சம்மதிக்காது ஹமாஸ் போராளிகளைத் தொடர்ந்து தீவிரவாதப் பட்டியலில் நீட்டிக்குமாறு சமீபத்தில் மனு தொடுத்ததை அடுத்து ஐரோப்பிய யூனியனை திங்கட்கிழமை கடுமையாகச் சாடியுள்ளது ஹமாஸ் அமைப்பு. காஸாவில் இருந்து ஹமாஸ் இன் பேச்சாளர் சமி அபு ஷுஹ்ரி பத்திரிகைகளுக்கான மின்னஞ்சல் வழியிலான அறிவிப்பில், இவ்விவகாரம் தொடர்பாகத் தகவல் அளித்தார்….

Read More

திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு நாடாளுமன்றில் உரிய ஆசனமொன்று ஒதுக்கப்படாதக காரணத்தினால் திரும்பிச் சென்றார்

முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு நாடாளுமன்றில் உரிய ஆசனமொன்று ஒதுக்கப்படாத காரணத்தினால் அமர்வுகளில் பங்கேற்காது நேற்று திரும்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்ற அமர்வுகள் நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் ஆரம்பமான போது ஆளும், எதிர்க்கட்சியினருக்கான ஆசன ஒதுக்கீடு தொடர்பில் சிக்கல் நிலைமை காணப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு, ஆளும் கட்சிப் பகுதியில் ஆசனம் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. இதனால் திஸ்ஸ அத்தநாயக்க அமர்வுகளில் பங்கேற்காது அவையை விட்டு வெளியேறிச் சென்று…

Read More

நாடாளுமன்றத்தில் திஸ்ஸவுக்கு ஆசனம் இல்லை!

நாடாளுமன்றத்தில் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு ஆசனம் இல்லை! அவருக்கான ஆசனம் சபை முதல்வரின் பட்டியல்படியே ஒதுக்கப்பட்டதாக நாடாளுமன்ற செயலாளர் அறிவித்திருந்தார். எனினும், அத்தநாயக்கவுக்கு ஆசனம் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. இதனையடுத்து அத்தநாயக்க அமர்வில் இருந்து வெளிநடப்பு செய்தார். பின்னர் சபாநாயகரிடம் இது முறையில் முறையிட்டுள்ளார்.. சபாநாயகரும் மீண்டும் நாடாளுமன்ற செயலாளருக்கே அதனை பாரப்படுத்தினார். இந்தநிலையில் ஆசன பிரச்சினை தீர்க்கப்பட்ட பின்னரே அவர் மீண்டும் நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்றார்.

Read More

மைத்திரிபால சிறிசேனவின் முக்கியத்துவமிக்க உரை

அனைத்துக் கட்சிகளும் ஒரே மேசையில் அமர்ந்து நாட்டின் எதிர்காலம் எதிர்கொள்ளவுள்ள சவால்கள் பற்றி கலந்துரையாடக் கிடைத்துள்ளமை இந்த நாட்டுக்கு கிடைத்த அதிஷ்டம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அனைத்துக் கட்சிகளும் கூட்டாக செயற்படுவதைப் பொறுக்காத சக்திகள் இதனைச் சீர்குலைக்க பகீரத பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். தாம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியானாலும் பாராளுமன்ற அதிகாரத்தை விஞ்சி ஒரு அடிகூட முன்னாள் நகர முடியாது என்றும் அவர் தெரிவித்தார். மோசமான யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ள…

Read More

புதிய அரசியல் கலாசாரம் உருவாக்கம்; ஒற்றையாட்சிக்கு உட்பட்டதாகவே தேசியப் பிரச்சினைக்கு தீர்வு: பிரதமர் ரணில்

* 13ஆவது திருத்தம் ஒற்றையாட்சிக்கு உட்பட்டதே * வெளிநாட்டு, உள்நாட்டு சவால்களை நாம் வெற்றி கொள்ள வேண்டும் * அரசியலமைப்பு திருத்தத்துக்கு சகல கட்சிகளும் ஒத்துழைப்பது அவசியம் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு நாட்டின் ஒற்றையாட்சிக்கு உட்பட்டதாகவே இருக்கும். 13 ஆவது திருத்தச் சட்டமும் அதற்கு உட்பட்டதாகவே இருக்கிறது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அத்துடன் இனப்பிரச்சினைக்கான தீர்வு வெளியில் இல்லாமல் பாராளுமன்றத்தினுள்ளேயே பிரச்சினைக்கான தீர்வு காணப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார். அத்துடன் 18…

Read More

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக அஸ்டின் பெர்ணான்டோ நியமனம்

அஸ்ரப் ஏ சமத் கிழக்கு மாகணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பணியாற்றியவரும் தற்பொழுது ஜனாதிபதி மைத்திரியின் ஆலோசராகவும் நியமிக்கப்பட்டுள்ள அஸ்டின் பெர்ணான்டோ நியமிக்கப்பட உள்ளாா்.

Read More

ஹிருனிகா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

தமது தந்தை பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை தொடர்பில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா வெளியிட்ட கருத்து குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு ஹிருனிகா கோரிக்கை விடுத்துள்ளார். பொலிஸ் தலைமையகம் மற்றும் ஹங்கொட பொலிஸ் நிலையம் ஆகியவற்றில் ஹிருனிகா இன்று முறைப்பாடு செய்துள்ளார். பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர படுகொலையுடன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு தொடர்பு இருப்பதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்ததுடன் அது தொடர்பான ஆவணங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்திருந்தார்….

Read More