Headlines

மக்களின் வாக்குரிமையை கொள்ளையிட அரசாங்கம் முயற்சி!– கபீர் ஹாசீம்

தேர்தல் தினமன்று வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு அதன் மூலம் தேர்தலை குழப்ப திட்டமிடப்பட்டுள்ளது. சுதந்திரமான முறையில் மக்கள் வாக்களிப்பதனை தடுக்கும் நோக்கில் வன்முறகைள் கட்டவிழ்த்துவிடப்பட உள்ளது. இந்த விடயம் அம்பலமானதைத் தொடர்ந்து கட்சிää தேர்தல் ஆணையாளருடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. அரசாங்கம் சூழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்தால் அவற்றை அச்சமின்றி எதிர்நோக்க எதிர்க்கட்சிகள் தயார். அரச சொத்து பயன்பாடு, சட்டவிரோத தேர்தல் பிரச்சாரம் போன்றவற்றை நோக்கும் போது, எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் சுயாதீனமானதும் நீதியானதுமாக…

Read More

காத்தான்குடியில் ஒன்றுபட்ட அரசியல் சக்திகள்..!

காத்தான்குடியில் அதிகரித்துள்ள தேர்தல் வன்முறைகள் தொடர்பில் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், வன்முறைகளுக்கு தமது கண்டனங்களை பதிவு செய்வதற்காகவும் பல்|வேறு அரசியல் சக்திகள் ஒன்றுபட்டுள்ளன. இதுதொடர்பிலான முக்கயி ஊடகவியலாளர் மாநாடு இன்று 3ஆம் திகதி நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். பட உதவி – பைரூஸ்

Read More

ஆயுள் முழுவதும் ஜனாதிபதியாக இருக்க, மஹிந்த ராஜபக்ஸ ஆசைபடுகிறார் – றிஷாத் பதியுதீன்

1983  ஆம் ஆண்டுக்கு பின்னர் இடம் பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான பாரிய சொத்தழிப்பு கலவரமாக அளுத்கம சம்பவம் பதியப்பட்டுள்ளதாக தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் றிசாத் பதியுதீன் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களை கைது செய்யுங்கள் என்று ஆதாரங்களை ஜனாதிபதியிடம் கொடுத்த போது அதற்கு அவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கொழும்பில் தெரிவித்தார். ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரி பால சிறிசேனவை ஆதரித்து கொழும்பு ஆட்டுப் பட்டித்தெருவில் நேற்று இரவு இடம் பெற்ற…

Read More

1000 மில்லியன் ரூபா, நட்டஈடு கேட்கிறார் மைத்திரி

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, அரச ஊடகங்களில் ஒன்றான சுயாதீன தொலைக்காட்சியிடம் ஆயிரம் மில்லியன் ரூபா நட்ட கோரியுள்ளார். தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செய்தியில் அவதூறு பிரச்சாரம் செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் சட்டத்தரணியினால் இந்த நிபந்தனைக் கடிதம், சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி நிறுவனம், பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், பிரதிப் பொது முகாமையாளர் சுதர்மன் ரத்தலியகொட ஆகியோருக்கு எதிராக வழக்குத் தொடரப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது….

Read More

அல்லாஹ்வின் இல்லம் மீது எவர் கைவைத்தாலும் அல்லாஹ் அவர்களுக்கான தண்டனையினை வழங்குவான்: றிஷாத் பதியுதீன்

அல்லாஹ்வின் இல்லம் மீது எவர் கைவைத்தாலும் அல்லாஹ் அவர்களுக்கான தண்டனையினை வழங்குவான் என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுதீன், எமது சமூகத்தின் பாதுகாப்புக்காக எதனையும் இழக்க தயாராகவுள்ளேன் என்றும்  கூறினார். பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஏன் எமது கட்சி ஆதரித்தது என்பது தொடர்பில் அநுராதபுரம் சீ.டி.சீ மண்டபத்தில் நேற்று (03) இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர்…

Read More