Headlines

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சர்வதேசத்திற்கான முதலாவது கிளை கட்டாரில்

இலங்கை அரசியலில் புதியதொரு அரசியல் தலைமைத்துவத்தினை உருவாக்கும் பயணத்தின் மற்றுமொரு மைல்கல்லாக கடல் கடந்து வாழும் இலங்கை மக்களினை ஒரு அமைப்பின் கீழ் கொண்டுவரும் பணியினை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி முன்னெடுத்துள்ளது.குறி்ப்பாக இலங்கை அரசியலில் நீண்ட காலமாக இருந்து வருகின்ற அரசியல் ஒவ்வாமை மற்றும் தனிப்பட்ட செயற்பாடுகள் என்பன இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் கட்சி ரீதியான பிளவுகளுக்கு வழி ஏற்படுத்தியதுடன்,பேரம் பேசும் சக்தியின் பலத்தினை பலவீனப்படுத்தியுள்ளதை அரசியல் நீரோட்டத்தில் காணமுடிகின்றது.இந்த நிலையானது இலங்கையில் வாழும்…

Read More

தம்புள்ள பள்ளிவாசல் குண்டு தாக்குதல்; அமைச்சர் றிசாத் கண்டனம்

தம்புள்ள ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசலின் மீது நேற்று இரவு மேற்கொள்ளப்பட்டுள்ள குண்டுத் தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு தற்போது கட்டார் சென்றுள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன், தனது உத்தியோகபூர்வ டிவிட்டர் பக்கத்தில் தம்புள்ள ஜும்ஆ பள்ளிவாசர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Read More

புத்தளம் அனல் மின் நிலைய மூன்றாம் கட்டம்: இலங்கை – சீன ஜனாதிபதிகள் இணைந்து திறந்து வைப்பர்

புத்தளம் நுரைச்சோலை அனல் மின் நிலைய மூன்றாம் கட்டம் நாளை மறுதினம் 16 ஆம் திகதி சீன ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரினால் திறந்து வைக்கப்பட இருப்பதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. புத்தளம் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூலம் மொத்தமாக 900 மெகா வோர்ட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படுகிறது. எதிர்கால மின்சார சவால்களை எதிர்கொள்ளவும் குறைந்த செலவில் மின் உற்பத்தி மேற்கொள்ளவும் இதன்மூலம் வாய்ப்பு ஏற்படுவதாகவும் அமைச்சு குறிப்பிட்டது….

Read More

யாஹுவை மிரட்டும் அமெரிக்கா..!

தன்னுடைய கண்காணிப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்காமல் போனால் தினமும் 2,50,000 டாலர்கள் (சுமார் ரூ.1 கோடி) அபராதமாக விதிக்கப்படும் என்று பிரபல வலைதளமான ‘யாஹு’வை அமெரிக்க அரசு மிரட்டியுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு ஜார்ஜ் புஷ் ஆட்சிக் காலத்தில் இணைய வலைதளங்களைப் பயன்படுத்தும் பயனாளர்களின் இணைய நடவடிக்கைகளைக் கண்காணிக்க அமெரிக்க அரசின் தேசியப் பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ), அந்நாட்டுச் சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்தது. ஆனால் அந்தச் சட்டத்துக்கு ‘யாஹு’ வலைதளம் அடிபணியவில்லை. இதை எதிர்த்து…

Read More

முடியாது என்று எமக்கு எதுவுமில்லை – ஜனாதிபதி

“முடியாது என்று எமக்கு எதுவுமில்லை, மக்கள் எம் மீது முழுமையான நம்பிக்கை கொள்ள முடியும்” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். ஊவாவில் ஆட்சியமைக்கலாம் என்று ஐ.தே.க. கனவு காண்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மக்களின் முழுமையான நம்பிக்கை எமக்குள்ளது எனவும் தெரிவித்தார். பதுளை ஹாலிஎலயில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதுளை மகளிர் மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி, “பெண்கள் கட்சிக்கும் நாட்டுக்கும் பெரும் சக்தியாக உள்ளதாகவும், உலகிலேயே பெண்களுக்கு உரிய அந்தஸ்து வழங்கும் நாடு இலங்கை”…

Read More

திறன்மிக்க ஆசிய நாடுகளின் பட்டியலில் இலங்கை

திறன்மிக்க ஆசிய நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடங்கியுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது. நாட்டின் பொதுமக்கள் தொடர்பிலான பொருளாதாரம் மற்றும் புதிய கொள்கைகள் என்பவற்றை அடிப்படையாக கொண்டு இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நேற்று வெளியிடப்பட்ட சுட்டெண்படி ஆசிய நாடுகளிலும் உலகளாவிய ரீதியிலும் ஜப்பான் முதலிடம் பெற்றுள்ளது. மக்களுக்கான பொருளாதாரம், அறிவு பூர்வமான பொருளாதார அறிவு உட்பட்ட 36 விடயங்கள் இந்த சுட்டெண்ணுக்கு ஆதாரமாக எடுக்கப்பட்டுள்ளன. உலகளாவிய ரீதியில் பின்லாந்து இரண்டாம் இடத்தையும் அமெரிக்கா நான்காம்…

Read More

31 ஆயிரம் முஸ்லிம் போராளிகளை எதிர்கொள்ள, 37 நாடுகள் களத்தில்

‘ஈராக் மண்ணில் கால் வைக்காமல், அமெரிக்காவால், ஐ.எஸ்.ஐ.எஸ்., வாதிகளை முற்றிலும் ஒழிக்க முடியும்’ என, அமெரிக்க அதிபரின், வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ்., ஈராக் அரசு படைகளுக்கு எதிராக சண்டையிட்டு, பல நகரங்களை கைப்பற்றி, இஸ்லாமிய பிரதேசமாக அறிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர், பராக் ஒபாமா, IS களை வேட்டையாடப் போவதாக அறிவித்தார். அதற்காக, அந்நாட்டின் விமானப்படை முழு வீச்சில் பயன்படுத்தப்படும் என்றார் அவர். இதற்கிடையே, ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பில், ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன், அதிகபட்சம், 10 ஆயிரம் பேர்…

Read More

4 இலங்கை மாணவர்கள், குவைத் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு

குவைத் கல்வி அமைச்சினால் இவ்வருட பல்கலைக்கழக அனுமதிக்காக நடாத்தப்பட்ட உயர் தரப் பரீட்சையில் நான்கு இலங்கை மாணவர்கள் குவைத் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.  குவைத் குர்துபா இஸ்லாமிய கல்லூரியில் கல்வி பயின்ற மாணவர்களான பஸால் முஹம்மத் முளப்பர் ,  பயாஸ் முஹம்மத் மஹ்ரூப்,அஷ்ரப்  முஹம்மத் அக்ரம், ஷஸான்  முஹம்மத்   பியாஸ்  ஆகியோரே இந்த மாணவ நட்சத்திரங்களாவர்.  அண்மையில் நடந்த 2013 / 2014 கல்வியாண்டுக்கான பரீட்சையில் அதி கூடிய புள்ளிகளை பெற்றுக்கொண்டதாலேயே இந்த நான்கு  இலங்கை…

Read More

முஸ்லிம்களிடையே தெளிவு ஏற்பட்டுள்ளது – ஒபாமா

இஸ்ஸாமிய தேச (ஐ.எஸ்.) இயக்கத்தின் செயல்களைக் கண்ட பிறகு, இதுபோன்ற பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டுமென்ற தெளிவு முஸ்லிம்களிடையே ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார். வாஷிங்டனில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சியின் நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றில் ஒபாமா பேசியதாவது: கிழக்கு ஆசிய நாடுகளில் தற்போது ஐ.எஸ். அமைப்பு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இராக், சிரியா ஆகிய நாடுகளில் சில பகுதிகள் ஐ.எஸ். கட்டுப்பாட்டில் உள்ளன. அவர்களது முரட்டுத்தனமான நடவடிக்கைகள், வழக்கத்துக்கு மாறானதாக உள்ளது. மத்திய…

Read More

அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான இலங்கைக் குழு உத்தியோபூர்வ விஜயமாக இன்று கட்டார் நாட்டுக்கு பயணம்

மூன்று நாள் விஜயம் செய்துள்ள இக்குழுவினர் இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதார மேம்படுத்தலுக்கும் ,முதலீடுகளை அதிகரிப்பதற்குமான உடன்படிக்கையை மேற்கொள்ளவுள்ளனர். கட்டார் நாட்டின் பொருளாதார வியாபார அமைச்சர் ஷேக் அகமட் பின் யாசின் பின் முகம்மட் அல்தானி மற்றும் கைத்தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஆகியோர் முக்கியத்துவமிக்க இவ்வுடன்படிக்கையை கைச்சாத்திடவுள்ளனர். கைத்தொழில் மற்றும் வர்த்தகம் ,நிதி, நீதி,வெளிநாட்டு விவகாரம், மீன்பிடி மற்றும் நீரியல் வளம் , கலாச்சார மற்றும் கலை அலுவல்கள் ஆகிய அமைச்சுக்களின் உயர் அதிகாரிகள் இலங்கை…

Read More

எதிரியை பலப்படுத்த விரும்பவில்லை- மங்கள சமரவீர

நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸவுடன் சவாலுக்கு செல்லவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.ஏற்கனவே தாம் சஜித் பிரேமதாஸவை பற்றி கூறிய கருத்துக்களில் மாற்றங்கள் இல்லை.ஆயிரக்கணக்கான ஐக்கிய தேசியக் கட்சியினரின் கருத்துக்களையே தாம் வெளியிட்டேன்சஜித் பிரேமதாஸ தமது பணிகளை காட்டவேண்டும் என்று கூறியது சவால் அல்ல. அடுத்த ஜனாதிபதி தேர்தலின்போது கட்சியின் தலைவரது வெற்றியை உறுதி செய்வதற்கான பணிகளை சஜித் முன்னெடுக்க வேண்டும்இந்த நிலையில் சஜித் பிரேதமாஸ, கட்சியின் ஒற்றுமை, எதிர்ப்பார்ப்பு…

Read More

இலங்கை பயணத்தின் போது குண்டு துளைக்காத கார் வேண்டாம்; பாப்பரசர் கோரிக்கை

இலங்கைக்கு வருகை தரும் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் குண்டு துளைக்காத காரில் பயணிக்க விருப்பமில்லை, தெரிவித்ததாக கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.புனித பாப்பரசர் பிரான்சிஸின் இலங்கை வருகையை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். பாப்பரசர் பிரான்சிஸ் வரும் ஜனவரி 13 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார். 3 நாள் பயணமாக இலங்கை வரும் பாப்பரசர் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.அத்துடன் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவையும் சந்திக்கவுள்ளளார். இந்நிலையில்…

Read More