Headlines

மோட்டார் சைக்கிள் கட்டுப்பட்டை இழந்ததில் ஒருவர் காயமடைந்தார்

எம்.எஸ்.எம். நிஸார் மட்டக்களப்பிலிருந்து ஆரையம்பதி நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பட்டை இழந்தது விபத்துக்குள்ளானது. நேற்று பி.ப 4.15 மணியளவில் நாவற்குடா கல்முனை பிரதான வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளோட்டி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். இவர் ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் காப்புறுதி நிறுவனமொன்றில் பணிபுரிபவரென்றும் அறியக்கிடைத்தது.

Read More

பள்ளிவாசலின் இமாமுக்கு ஜுனைட் நளீமியின் மாதாந்த கொடுப்பனவு

வாழைச்சேனை நிருபர் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் மீள் குடியேற்ற கிராமமான காரமுனை முஹைதீன் பள்ளிவாசலின் இமாமுக்கான மாதாந்த கொடுப்பனவு இன்று ஜுனைட் நளீமியினால் வழங்கி வைக்கப்பட்டது. அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் வசித்து வரும் இக் கிராம மக்கள் தங்களது பள்ளிவாயல் இமாமுக்கான கொடுப்பணவு வழங்குவதில் பல் வேறு சிறமங்களை எதிர்நோக்கி வந்தனர். இது தொடர்பாக ஜுனைட் நளீமியின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து கடந்த ஐந்து மாதங்களுக்கான கொடுப்பணவை பள்ளிவாயல் நிருவாகத்தினரிடம் ஜுனைட் நளீமி வழங்கி…

Read More

அவுஸ்திரேலிய கொலை சூத்திரதாரி, உடலை புதைக்க யாருமில்லை

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகர ஓட்டலில் புகுந்து அங்கிருந்தவர்களை, 16 மணி நேரம் பிணை கைதியாக பிடித்து வைத்திருந்ததால், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட, ஹரோன் மோனிஸ் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்ய, அந்நாட்டின் எந்தவொரு முஸ்லிம் அமைப்பும் முன்வரவில்லை. அவன் உடலை, கடலில் அமிழ்த்துங்கள் என, மதகுருமார்கள் கூறியுள்ளனர். கடந்த 15ல், சிட்னி ஓட்டல் முற்றுகையின் போது, போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட, உடல் இன்னமும், உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை; உடலை கேட்டு, இது வரை யாரும் அரசை அணுகவில்லை. இந்நிலையில்,…

Read More

இலங்கையின் முதல் அறபுக் கல்லூரியின், 130 வருட பூர்த்தி விழாவும் பட்டமளிப்பு விழாவும்

இலங்கையின் முதல் அறபுக் கல்லூரியான வெலிகம பாரீ அறபுக் கல்லூரியின் 130வது வருட பூர்த்தி விழாவும் 30வது ‘அல்-ஆலிம்’ பட்டமளிப்பு விழாவும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு கல்லூரியில் நடைபெறவுள்ளன. கல்லூரி அதிபர் மெளலானா மெளலவி ஏ.ஆர். அப்துர் ரஹ்மான் ஹாபிழ் (மழாஹிரி) தலைமையில் இடம்பெறும் இவ்விழாவில் யூ.கே.யைச் சேர்ந்த ஷைகுல் ஹதீஸ் ஹழ்ரத் மெளலானா முகம்மது ஸலீம் தவ்ராத் பிரதம அதிதியாகக் கலந்து கொள்கிறார். விசேட பேச்சாளர்களாக இப்னு உமர் ஹதீஸ் உயர்…

Read More

பொது பலசேனவினால் முஸ்லிம்கள் பாதிப்பு, மைத்திரிக்கு வாக்களித்தால், உங்கள் தேவையை நிறைவேற்றுவேன் – சந்திரிக்கா

இக்பால் அலி பொது பலசேன என்ற அமைப்பினால் முஸ்லிம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அவர்களுக்கு எடுத்துக் கூறியும் அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. நீங்கள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களியுங்கள். உங்களுடைய சகல தேவைகளையும் நிறைவேற்றித் தருவேன் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்தார். பறகஹதெனியவிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முஸ்லிம் ஆதரவாளர்களை 19-12-2014 முன்னாள் சந்திரிக்கா பண்டாரநாயக சந்தித்து உரையாடியபோது அவர் இதனைத் தெரிவித்தார். மக்களுக்கு பயனுள்ள கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி….

Read More

ஜனாதிபதியின் காத்தான்குடி கூட்டத்தில் கம்பி சரிந்து விழுந்ததில் 6 பெண்கள் காயம்

அபூ ஷஹ்மா (19) காத்தான்குடியில் நடைபெற்ற ஜனாதிபதி மஹிந்தவின் தேர்தல் பிச்சாரக் கூட்டத்தின் இடையில் பொலித்தீன் கொடிகள் மற்றும் ஒலிபெருக்கிகள் கட்டப்பட்டிருந்த இரும்புக் கம்பி ஒன்று சரிந்து விழுந்ததில் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த ஆறு பெண்கள் காயமடைந்துள்ளனர். அங்கு வீசிய பலத்த காற்றும் அதனோடு பெய்த கடும் மழையை அடுத்தே குறித்த கம்பி சரிந்து விழுந்துள்ளது. காயமடைந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Read More

ஓட்டமாவடி-நாவலடியில் அமைதிப் பேரணி

வாழைச்சேனை நிருபர் கல்குடாத் தொகுதியில் நான்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தமிழ் முஸ்லீம் மக்களின் குடியிருப்புக் காணிகளுக்கான காணி அனுமதிப் பத்திரங்களை மிக விரைவில் பெற்றுத் தருவதாக மகநெகும தலைவர் கே.கே.டி.ரணவக்க தெரிவித்தார். பயங்கரவாத எதிர்ப்பு மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நாட்டில் ஏற்பட்ட நிலையான சமாதானத்தை ஏற்படுத்திய அரசாங்கத்திற்கும் இராணுவத்தினருக்கும் நன்றி தெரிவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட அமைதிப் பேரணியும் மிக நீண்ட காலமாக காணி அனுமதிப் பத்திரம் கிடைக்காமல் இருக்கும் காணிகளுக்கு காணி அனுமதிப்…

Read More

மின்சாரசபையில் கடமையாற்றும் மனிதவள நிறுவன ஊழியர்களுக்கு அடுத்த வாரம் நிரந்தர நியமனம்

மின்சாரசபைக்கு மனிதவள நிறுவனங்கள் ஊடாக இணைத்துக்கொள்ளப்பட்டவர்களில் தகுதியானவர்களுக்கு அடுத்த வாரம் நிரந்தர நியமனம் வழங்கப்படவிருப்பதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார். அடுத்தவாரம் வெள்ளிக்கிழமையளவில் இவர்களுக்கு நியமனம் வழங்கப்பட விருப்பதாகவும், மனிதவள நிறுவனங்களின் ஊடாக இணைத்துக்கொள்ளப்பட்ட எவருக்கும் அநீதி இழைக்காத வகையில் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். கொழும்பிலுள்ள அமைச்சு அலு வலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக வியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரி விக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். வரவுசெலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டமைக்கு…

Read More

காத்தான்குடியில் அடை மழை; வீடுகள், வீதிகள் வெள்ளத்தில்; இயல்பு நிலை பாதிப்பு

நேற்று இரவு முதல் கிழக்கு மாகானத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இவ் அடை மழை காரணமாக காத்தான்குடியில் பல தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதன் காரணமாக மக்கள் இடம்பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

Read More

மைத்திரிபால வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனம் (முழுமையாக இணைப்பு)

புதிய ஜனநாயக முன்னணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின், 100 நாட்களுக்குள் புதிய தேசம் எனும் தொனிப்பொருளில் வடிவமைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனம் கொழும்பு, விகாரமகாதேவி பூங்காவில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இவ்வைபவத்தில் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, அதுரலியே ரத்ன தேரர், சம்பிக்க ரணவக்க, ரவி கருணாநாயக்க, ஆர்.யோகராஜன், துமிந்த திசாநாயக்கா உட்பட பலர் கலந்துகொண்டனர். இவ்வெளியீட்டின் போது மின்சாரம் துண்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மைத்திரியின் தேர்தல் விஞ்ஞாபனம் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என எதிர்க்கட்சிகளின் பொது…

Read More

மைத்திரியின் ”100 நாட்களுக்குள் புதிய தேசம்” தேர்தல் விஞ்ஞாபனம் – மின்சாரமும் துண்டிக்கப்பட்டது

புதிய ஜனநாயக முன்னணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின், 100 நாட்களுக்குள் புதிய தேசம் எனும் தொனிப்பொருளில் வடிவமைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனம் கொழும்பு, விகாரமகாதேவி பூங்காவில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இவ்வைபவத்தில் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, அதுரலியே ரத்ன தேரர், சம்பிக்க ரணவக்க, ரவி கருணாநாயக்க, ஆர்.யோகராஜன், துமிந்த திசாநாயக்கா உட்பட பலர் கலந்துகொண்டனர். இவ்வெளியீட்டின் போது மின்சாரம் துண்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

என் வாழ்நாளிலேயே இதுபோன்ற கொடூரமான தாக்குதலை நான் பார்த்ததில்லை – இம்ரான் கான்

பாகிஸ்தான் அரசியலில் திடீர் திருப்பமாக, ராணுவப் பள்ளியில் தாக்குதலை தொடர்ந்து, அரசுக்கு எதிரான போராட்டத்தை நிறுத்திக்  கொள்வதாக எதிர்க்கட்சி தலைவர் இம்ரான் கான் அறிவித்துள்ளார். பாகிஸ்தானில், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், முறைகேடுகளை செய்து நவாஸ் ஷெரீப்  ஆட்சியை பிடித்ததாக குற்றம் சாட்டிவந்த இம்ரான்கான், ஷெரீப் பதவி விலக வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் 14ம் தேதியில் இருந்து தொடர் போராட்டங்களை நடத்தி  வருகிறார். அதேபோன்று, ஷெரீபின்  ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டதாக குற்றம் சாட்டி, அவருக்கு எதிராக…

Read More