பதவியேற்ற நேரம் முதல் இன, மத, மொழி, பேதங்களுக்கு இடமளிக்கமாட்டேன் – மைத்திரிபால
நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்து ஜனாதிபதியின் பதவிக்காலம் நான்கு வருடங்களுக்கு மட்டுப்படுத்தப்படுமெனத் தெரிவித்திருக்கும் எதிரணி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தனது பதவிக்காலம் ஒரு தடவையாக மட்டுமே இருக்கும் எனவும் குறிப்பிட்டிருக்கிறார். கொழும்பு வர்த்தகக் கண்காட்சி மண்டபத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற தேசிய ஐக்கிய அமைப்பின் முஸ்லிம் சமூக ஒன்றுகூடலில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். உலக நாடுகளில் ஜனாதிபதியின் பதவிக்காலம் 4 அல்லது ஐந்து வருடங்களேயாகும். எமது நாட்டில் மட்டுமே அது ஆறு வருடங்களாக உள்ளது. நான்…
