ஐ.தே.க வில் இணைந்தார் நுவரெலியா பாராளுமன்ற உறுப்பினர்
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பெருமாள் ராஜதுரை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துள்ளார். சற்றுமுன் இடம்டபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பெருமாள் ராஜதுரை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துள்ளார். சற்றுமுன் இடம்டபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.
பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு தினமாக இன்று முதல் மார்கழி 10ஆம் திகதி வரையான காலப்பகுதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்.சமூக செயற்பாட்டு மையம் பெண்கள்,சிறுவர்களின் பாதுகாப்பு நலன் சார்ந்த செயற்பாடுகளை கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக முன்னெடுத்து வருகின்றது. அத்துடன் கிராம மட்டங்களில் பெண்கள்,சிறுவர்களுடைய பாதுகாப்பினை கருத்திற் கொண்டு யாழ்.மாவட்டத்தில் 35 கிராம மட்ட செயற்பாட்டுக் குழுக்களினையும் அமைத்து செயற்படுத்தி வருகின்றது. இந்நிலையில் பெண்கள் வன்முறை ஒழிப்பு தினமான கார்த்திகை 25முதல் மார்கழி 10ஆம் திகதி வரையில் உலகளாவிய ரீதியில்…
பங்களாதேஸ், தலைநகர் டாக்காவில் 1,151 பேர் ஒன்றாக இணைந்து மிகப்பெரிய செல்பி படம் ஒன்றை எடுத்துள்ளனர். ஒரே செல்பி படத்தில் இத்தனை மக்கள் பங்கேற்பது இதுவே முதல் முறை என்பதால் இது உலக சாதனையாக குறிப்பிடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நொக்கியா தொலைபேசி உற்பத்திகளை மேற்கொள்ளும் மைக்ரோசொப்ட் நிறுவனம் முன்னெடுத்தது. ‘மைக்ரோசொப்ட் லுமியா பங்களாதேஸ்’ பேஸ்புக் பக்கத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் பதிவு செய்து கொண்டவர்கள் இந்த புகைப்படத்தில் இடம்பெற்றுள்ளனர். இந்த படம் சர்வதேச ரீதியில் பிரபலமடைந்துள்ளது. இதற்கு…
பைல்களுக்கு பயந்தால் அரசியல் செய்ய முடியாது என ஆளும் கட்சியின் சிறு ஏற்றுமதிப் பயிர் அபிவிருத்தி அமைச்சர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். அரசாங்கத்திலிருந்து வெளியேறியவர்கள் மாத்திரமன்றி அரசாங்கத்தில் உள்ளவர்களினதும் பைல்கள் உள்ளதாகவும் இப்போது அந்த பைல்களை வெளிப்படுத்தினால் அரசாங்கம். தவறிழைத்ததாக மாறிவிடும். பைல்கள் தொடர்பில் கதைப்பதில் வேலையில்லை. உள்ளே உள்ளவர்களது பைல்கள் உள்ளன. வெளியே உள்ளவர்களது பைல்களும் உள்ளன. ஆனால் பைல்களுக்கு பயந்து அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாது. அப்படி இல்லாவிட்டால் பைல்களை உருவாக்கி தமக்கு அருகில்…
மஹிந்த ராஜபக்ச 18வது சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று 25-11-2014 காலை நேபாளத்துக்கு புறப்பட்டு சென்றார். சார்க் மாநாடு காத்மண்டுவில் இன்று முதல் 27ஆம் திகதி வரை நடைபெறுகிறது. இந்தநிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாளை நடைபெறும் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்கவுள்ளார். இதனையடுத்து அவரும் பாரியாரும் லும்பினிக்கு விஜயம் செய்யவுள்ளனர். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் மற்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஹஸன் அலி ஆகியோர் இன்று நள்ளிரவு மலேசியா பயணமாகியுள்ளதாக…
மைத்திரிபால சிறிசேனவின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு முன்னதாகவே அரசின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமய அரச பொறுப்புகளிலிருந்து வெளியேறியிருந்தது. இன்னும் அரசில் அங்கத்துவம் வகித்துக்கொண்டிருக்கும் அமைச்சர்கள் பலரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முதுகெலும்பாக இருந்துகொண்டிருக்கிற பெருந்தலைகளும் ஜனாதிபதித் தேர்தலில் பொது அபேட்சகருக்கு ஆதரவளிக்கக் கூடுமான சூழ்நிலைகள் எழுந்துள்ளன. ஜாதிக ஹெல உறுமய, பத்தொன்பது அம்சக் கோரிக்கைகள் கொண்ட அரசியலமைப்புத் திருத்தத்தை முன்மொழிந்திருந்தது. இந்தக் கோரிக்கைகள் மறுதலிக்கப்படுமானால் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவோம் என்றும், ராஜபக்சவைத் தோற்கடிப்போம்…
நகர்வுகள், திருப்பங்கள், திடீர் செய்திகள் அனைத்தும் அரசியல் கட்சிகளுக்கிடையே போரொன்று வெடித்திருப்பதையே நிரூபணம் செய்கின்றன. அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேன, எதிர்க் கட்சி ஆதரவுடன் ஜனாதிபதித் தேர்தலுக்கான பொது அபேட்சகராக (வேட்பாளர்) வெளிப் பட்டிருப்பது மகிந்த ராஜபக்சவுக்கு பலத்த சவாலாகியுள்ளது. இதுவரை ராஜபக்ச அரசிலிருந்து அமைச்சர்கள் மூவர், பிரதியமைச்சர் ஒருவர், பாராளுமன்ற உறுப் பினர்கள் இருவர் பதவி விலகியுள்ளனர். இன்னும் 20 பேர் அளவில் விலகிச் செல்லக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றுக்கிடையில் ஜனாதிபதி தேர்தலுக்கான அபேட்சகர்கள்…
புதிதாக பதவியேற்றுள்ள சுகாதார அமைச்சர் நேற்று மீண்டும் 1800 பேருக்கு புதிதாக நியமனங்கள் வழங்கியுள்ளார். நேற்று நியமன கடிதம் மைத்திரி மூலம் பெற்றவர்கள் கடமைக்கு சென்று ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளதாக சிங்கள நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நான் ஜனாதிபதியானால் ரணிலை பிரதமராக்குவேன் என்று பொது எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட அறிக்கையால் ஆளும் கட்சியிலிருந்து பொது எதிரணியுடன் இணைய விருப்பம் தெரிவித்த உறுப்பினர்கள் சிலர் சந்திரிகாவிற்கு நெருக்கடி கொடுத்து வருவதாக தெரியவருகிறது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிக்கப்படுமென பொதுஎதிரணி பிரச்சாரம் செய்து வருகிறது. மைத்திரிபால ஜனாதிபதியானால் அதிகாரங்கள் பகிரப்பட்டு பிரதமர் ஆட்சி நடக்கலாம். ஆனால் பிரதமர் ரணிலாக இருந்தால் நாம் வெளியேற மாட்டோம். மைத்திரி கூறிய வார்த்தையை மீளப்பெற்று பிரதமர் யார்…
இந்நாட்டு முஸ்லிம்கள் எப்போதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குமே ஆதரவு நல்க வேண்டும் என்று சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம். அப்துல் காதர் தெரிவித்துள்ளார். எதிரணியினரின் ஏமாற்று பசப்பு வார்த்தைகளை முஸ்லிம்கள் நம்பி ஏமாந்து விடக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முழுநாட்டு மக்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் இருக்கும் போது ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் துரோகமிழைத்த மைத்திரி அல்ல, எவர் அபேட்சகரானாலும் எமது ஜனாதிபதியே…
தி. ரஹ்மத்துல்லா அரபு எமிரேட்சில் விசா மூலம் தங்கியுள்ள அரபு அல்லாத அயல் நாட்டினர், 100 வருட ஒப்பந்தத்தில் ஷார்ஜாவில் வீட்டு மனைகள் வாங்கலாம். வீட்டு மனைகளில் முதலீட்டை அயல் நாட்டினருக்கு ஷார்ஜா முதன் முதலாக அனுமதித்துள்ளது. ஷார்ஜாவில் டைடல் சிடியில் 7,500 சதுர அடி பரப்ரளவு உள்ள மனைகள், ஒரு சதுர அடி 110திர்ஹம் முதல் 303 திர்ஹம் வரை கிடைக்கும். ( ஒரு சதுர அடி சுமார் 3690 ரூபாய் முதல் 10 000 ரூபாய்…
-ஏ.எச்.எம்.பூமுதீன்- எதிப்துக்கு விஜயம் செய்துள்ள அ.இம.கா தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் ,உலகில் இஸ்லாமிய கல்விக்கு பிரபல்யம் பெற்ற அல் – அஸ்ஹர்பல்கலைகழகத்திற்கு நேற்று சனிக்கிழமை (22) விஜயம் செய்தார்.அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் இலங்கையிலிருந்து புலமைப்பரிசில் பெற்றுச் னெ;றுள்ள மாணவர்களுடன் அமைச்சர் இதன்போது பல மணிநேரம் கலந்துரையாடினார்.மாணவர்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்த அமைச்சர் ரிசாத் பதியுதீன் இலங்கை மாணவர் ஒன்றிய வங்கிக் கணக்கிற்கு உதவித் தொகை ஒன்றையும் கையளித்தார்.குறித்த உதவித் தொகையை…