Headlines

இலங்கையருக்கு சவூதி அரேபியா பயிற்சி

சவூதி அரேபியாவுக்கு தொழில்களுக்குச் செல்லும் இலங்கையர்களுக்காக நடத்தப்படும் பயிற்சிப் பாடநெறிகளின் தரத்தை உயர்த்துவதற்காக சவூதி அரேபிய பயிற்சி ஆலோசகர்களின் ஒத்துழைப்பை பெற இணக்கம் காணப்பட்டுள்ளது. அமைச்சர் டிலான் பெரேராவின் உத்தரவின் பேரில் இது தொடர்பான விசேட பேச்சுவார்த்தை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக தலைமையகத்தில் நடைபெற்றது. பணியகத் தலைவர் அமல் சேனாலங்காதிகார சவூதி அரேபிய தொழில் முகவர் சங்கத் தலைவர் பொட் அல்பதா மற்றும் பிரதிநிதிகள் இப் பெச்சுவார்த்தைகளில் பங்குபற்றினர். சவூதி அரேபிய தொழிலமைச்சருடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை…

Read More

பேஸ்புக் பொடியன் கைது

வவுனியா பொடியன் என்ற பெயரில் பேஸ்புக் கணக்கொன்றை வைத்திருந்த 16 வயதுச் சிறுவன் ஒருவனை வவுனியா பொலிஸார் நேற்று இரவு கைதுசெய்துள்ளனர்.  குறித்த சிறுவன் ‘வவுனியா பொடியன்’ என்ற பெயருடன் பேஸ்புக்கில் வவுனியாவைச் சேர்ந்த பல அரசியல்வாதிகள் சமூக விரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் ஆகியோரின் புகைப்படங்களை பிரசுரித்து கீழ்த்தரமான வார்த்தைகளை பிரயோகப்படுத்தி விமர்சித்து வந்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.    இதனைத் தொடர்ந்த, மேற்படி சிறுவனை வவுனியா பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் விசாரணைகளையும்   மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

நாட்டில் 5 வருடங்களில் எந்தவொரு வன்முறை சம்பவங்களும் இடம்பெறவில்லையாம் – கூறுகிறார் பீரிஸ்

(அண்மையில் அலுத்கமயில் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட சம்பவத்தில் முஸ்லிம்களுக்கு உயிர்செதமும் பாரிய அளவிலான பொருட்சேதமும் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது ) நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு ஐந்து வருடங்கள் கடந்துள்ளபோதும் எந்தவொரு வன்முறைச் சம்பவங்களும் இடம்பெறாமையானது கவனிக்கப்பட வேண்டியதொரு விடயம் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாளாந்தம் ஒவ்வொரு வன்முறைகள் நடைபெற்று வந்த நிலையில் பயங்கரவாதத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வந்ததுடன், உலகின் எந்தவொரு பகுதியிலும் இல்லாத வகையில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு ஐந்து வருடங்கள் முடிவடைந்துள்ள…

Read More

வாழ்வதற்கு உகந்த நகரம் கொழும்பு – உலகில் 49 வது இடம்

உலகில் வாழ்வதற்கான மிகவும் உகந்த நகரங்களில் கொழும்பு நகருக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளது. உலக நகரங்களை தரப்படுத்தும் வரிசையில் கொழும்பு நகருக்கு 49வது இடம் கிடைத்துள்ளது. அத்துடன் கடந்த காலத்தில் அதிக மாற்றங்களுக்கு உள்ளான நகரங்களில் கொழும்புக்கு 10வது இடம் கிடைத்துள்ளது. கொழும்பு நகரம் தவிர, தெற்காசிய நாடுகளின் நகரங்களில் நேபாளத்தின் காத்மண்டு மாத்திரமே தரப்படுத்தலில் இடம்பிடித்துள்ளது. ஸ்திரத்தன்மை, உட்கட்டமைப்பு வசதி, கல்வி, சுகாதார சேவை உள்ளிட்ட விடயங்கள் இந்த தரப்படுத்தலின் போது கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும்,…

Read More

இஸ்ரேலின் ‘ஆபரேசன் ப்ரொடக்டிவ் எட்ஜ்’ – மண்டியிடாத பலஸ்தீனியர்கள்..!

Abusheik Muhammed சொந்த மண்ணை காக்க திட உறுதி மற்றும் வீரியத்துடன் நடக்கும் போராட்டத்தை எந்தவொரு ஆயுதம் மூலம் அழிக்க முடியாது என்ற உண்மை, 51 நாட்களாக நீண்ட காஸா மீதான இஸ்ரேலின் போர் உலகுக்கு உணர்த்தியுள்ளது. ஆபரேசன் ப்ரொடக்டிவ் எட்ஜ் (operation protective edge) என்ற பெயரில் இஸ்ரேல் போரைத் துவக்கியது. ஹமாஸை ஒழிப்பதே தங்களது போரின் லட்சியம் என்று அறிவித்த இஸ்ரேலின் அரசியல் மற்றும் ராணுவ தலைமை பின்னர் ஹமாஸின் ராக்கெட் தாக்குதல்களை நிறுத்தவேண்டும்,…

Read More

IS க்கு போர்ப் பயிற்சி அளிக்கும் முன்னாள் பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகள்

சிரியா மற்றும் ஈராக்கில் அரசுப் படைகளை எதிர்த்து தாக்குதல் நடத்தி வரும் போராளிகள் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ். என்பது ‘இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அன்ட் சிரியா’ என்ற ஆங்கில வார்த்தையின் சுருக்கம் ஆகும். ஈராக்கையும், சிரியாவின் ஒரு பகுதி மற்றும் துருக்கியின் ஒரு பகுதி ஆகியவற்றையும் இணைத்து தனி இஸ்லாமிய நாட்டை உருவாக்குவது இவர்களது திட்டமாகும். இதுமட்டுமல்லாமல் எதிர்காலத்தில் பக்கத்து நாடான லெபனான், பாலஸ்தீனம், இஸ்ரேல், ஜோர்டான், துருக்கி ஆகிய நாடுகளையும் ஒன்றிணைத்து…

Read More

மோடி கூறியதை ஏன் அவரால் செய்ய முடியவில்லை? சிதம்பரம் கேள்வி

திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. இதில் முன்னாள் இந்திய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 31 சதவீத ஓட்டுகள் மட்டுமே கிடைத்தது. 69 சதவீதம் பேர் வாக்களிக்கவில்லை. தமிழகம், கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, ஒரிசா, மேற்கு வங்காளம், திரிபுரா என பல மாநிலங்களில் மக்கள் பா.ஜனதாவுக்கு வாக்களிக்கவில்லை. இங்கு பா.ஜனதாவுக்கு எதிராக மக்கள் வாக்களித்தார்கள். எனவே இந்த வெற்றியை கண்டு…

Read More

சர்வதேச புத்தக கண்காட்சி எதிர்வரும் 10 ம் திகதி ஆரம்பம்

16 வது சர்வதேச புத்தக கண்காட்சி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10 ம் திகதி முதல் 17ஆம் திகதி வரை பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.     இக் கண்காட்சியில் 165 உள்நாட்டு வெளியீட்டாளர்களும் 36 வெளிநாட்டு வெளியீட்டாளர்களும் பங்களிப்பு செய்யவுள்ளனர்.   மேலும்  தரமான குழந்தைக் கல்விக்கான விளையாட்டுப் பொருட்கள், பயிற்சிப் புத்தகங்கள் உட்பட பல பொருட்கள் இக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

விரைவில் 1000 புதிய கிராமஅலுவலர்கள்

நாடளாவிய ரீதியில் நிலவும் கிராம அலுவலர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் மேலும் 1000 கிராம அலுவலர்களை புதிதாக நியமிப்பதற்கு பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.    நாடளாவிய ரீதியில் மேலும் சுமார் ஆயிரத்து 600 வெற்றிடங்கள் தற்போது நிலவுகின்றன. அவற்றை நிரப்பும் வகையில் 1000 பேருக்கு நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அமைச்சு தெரிவித்துள்ளது.      ஏற்கனவே நடத்தப்பட்ட திறந்த போட்டிப் பரீட்சையில் நியமனம் பெற்றவர்களுக்கு அடுத்ததாக அதிக புள்ளிகளைப் பெற்றுக் கொண்டவர்களிலிருந்து நேர்முகப்…

Read More

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் ஜனவரி 3 இல்

ஜனாதிபதித் தேர்தலை 2015 ம் ஆண்டு ஜனவரி மாதம் 3ம் திகதி அரசியல் சாசனத்திற்கமைய நடத்தவுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது. விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்ட போதிலும் நிச்சயமான திகதிகள் இதுவரையில் வெளியிடப்படவில்லை. அரசாங்கத்தை ஆதாரம் காட்டி சிங்களப் பத்திரிகையொன்றே இவ்வாறு எதிர்வரும் ஜனவரி 3 இல் ஜனாதிபதி தேர்தல் நடைபெற எனத் தெரிவித்திருந்தது. அந்த பத்திரிகையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது – ஜனாதிபதி தேர்தலை நடாத்த உச்ச நீதிமன்றின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட்டு எதிர்வரும் நவம்பர்…

Read More

உக்ரைன் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ரஷ்யா

கிழக்கு உக்ரைன் போராளிகள் மீது தாக்குதல் நடத்தச் சென்ற தங்கள் நாட்டு போர் விமானத்தை, ரஷ்யா ஏவுகணையை வீசி சுட்டு வீழ்த்தி விட்டதாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது. ’எஸ்.யூ.25’ ரகத்தை சேர்ந்த அந்தப் போர் விமானத்தை ரஷ்ய ஏவுகணை இன்று வழிமறித்து தாக்கி அழித்து விட்டதாகவும், அதிர்ஷ்டவசமாக அந்த போர் விமானத்தின் விமானி உயிர் தப்பிவிட்டதாகவும் கிழக்கு உக்ரைன் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக உக்ரைன் அரசு நடத்தி வரும் சமூக வலைத்தளம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

நவாஸ் ஷெரீப் வீட்டை முற்றுகையிட முயற்சி: 8 பேர் பலி, 300 பேர் காயம்

பாகிஸ்தான் பிரதமரின் வீட்டை முற்றுகையிட முற்பட்ட எட்டுப் பேர் பலியாகியுள்ளதாகவும் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வௌியாகியுள்ளன. பாகிஸ்தானில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் முறைகேடுகள் செய்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் வெற்றி பெற்றதாக கூறி அவருக்கு எதிராக முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் அரசியல்வாதி இம்ரான் கான் மற்றும் முஸ்லிம் மத தலைவர் தாஹிருல் காத்ரி ஆகியோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் கடந்த 15 நாட்களாக தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள பாராளுமன்ற கட்டிடம்…

Read More