Headlines

நான் கர்ப்பமாக உள்ளேன், என் கணவனை கொன்றுவிடாதீர்கள் – சோலங்கராச்சியின் மனைவி கதறல்

தனது கணவரை கொலை செய்ய வேண்டாம் என முல்லேரியா -கொட்டிகாவத்த பிரதேச சபையின் தலைவர் பிரசன்ன சோலங்காரச்சியின் மனைவி நிவங்கா சோலங்காரச்சி அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டுள்ளார். கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (29) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தான் தற்போது கர்ப்பிணியாக இருப்பதாகவும் தயவு செய்து எனது கணவரை கொலை செய்ய வேண்டாம் எனவும் நிவங்கா சோலங்காரச்சி அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்…

Read More

றிஷாத் பதியுதீனின் கூட்டத்திற்கு அணிதிரண்ட காத்தான்குடி மக்கள் ( படங்கள் இணைப்பு )

ஏ.எச்.எம்.பூமுதீன் பொதுவேட்பாளர் மைத்திரபால மற்றும் ரிசாத் பதியுதீன் குழுவினர்; இன்று காலை (29) காத்தான்குடிக்கு விஜயம் செய்தனர். இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேர்தல் காரியாலயம் ஒன்றும் காத்தான்குடியில் திறந்து வைக்கப்பட்டது. அகில அலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர் ரிசாத் பதியுதீன் மற்றும் பொதுவேட்பாளரின் உரையை கேட்பதற்காக இக்கூட்டத்திற்கு காத்தான்குடி மக்கள் திரண்டு வந்திருந்தனர். சிப்லி பாறுக் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் ரிசாத் பதியுதீன் உரையாற்றுவதை படத்தில் காணலாம்.

Read More

ஓட்டமாவடியில் ஒன்றிணைந்த முஸ்லிம் தலைமைகள்

பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து இன்று (29.12.2014) திங்கட்கிழமை ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவுச் சங்க வளாகத்தில் பொதுக்கூட்டமொன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் எதிரணி பொது வேட்பாளா் மைத்திரிபால சிறிசேன, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவா் றிஷாட் பதியூதீன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவா்  ரவூப் ஹக்கீம்,, ஐ.தே. கட்சி பிரதித்தலைவா் கரு ஜயசூரிய முன்னாள் கடற்றொழில் அமைச்சா் ராஜித சேனரத்ன பாராளுமன்ற உறுப்பினா் அல்ஹாஜ் MSS. அமீா் அலி, மாகாண சபைத் பிரதித்தவிசாளா் MS. சுபைா், ஐ.தே….

Read More

மைத்திரிக்கு 22; மஹிந்தவுக்கு 2

ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு விடுக்கப்பட்டதை யடுத்து, கட்சித் தாவல்கள் இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் முதல் நேற்றுவரை ஆளும் மற்றும் எதிரணியிலிருந்து 25 எம்.பிக்கள் மற்றும் 314 உள்ளூராட்சிசபை உறுப்பினர்கள் அடங்கலாக மொத்தமாக 339 பேர் கட்சிதாவியுள்ளனர். அரசின் பங்காளிக் கட்சியான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வெளியேற்றத்துடன், ஆளுந்தரப்பிலிருந்து நேற்றுவரை 23 எம்.பிக்கள் எதிர்க்கட்சிக்குத் தாவியுள்ள நிலையில், எதிரணியிலிருந்து 2 எம்.பிக்கள் ஆளுந்தரப்புக்குத் தாவியுள்ளனர். கட்சித் தாவல்களின் அடிப்படையில்எதிரணியின் பொது…

Read More

தோல்வியை ஒத்துக் கொண்ட ராஜபக்ச குடும்பம் ; மைத்திரிபால சிறிசேன

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் தோல்வி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போதுள்ள தனிமனித அதிகாரத்திற்கு முடிவு கட்டவே நான் பொதுவேட்பாளராக களமிறங்கியுள்ளேன்” “ஜனவரி 8ஆம் திகதி எனது வெற்றி உறுதி. எனது வெற்றியை எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது. எனது வெற்றி மக்களின், ஜனநாயகத்தின், சுதந்திரத்தின் வெற்றியாகும். அதேபோல், தனிமனித அதிகாரத்தை முடிவுக்கு கொண்டுவரும் வெற்றியுமாகும். ஜனாதிபதியும், ராஜபக்‌ச குடும்பமும், அவரது அடிவருடிகளும் தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டனர். இதனால், எமது மேடைகளை…

Read More

பலஸ்தீன விவகாரத்தில் ஆதரவளிப்பதற்காக துருக்கி தலைவர்களுக்கு நன்றி

அனைத்து முஸ்லிம் சக்திகளினதும் ஆதாரமாக துருக்கி இருப்பதாக பாராட்டி இருக்கும் ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் காலித் மிஷால் பலஸ்தீன விவகாரத்தில் ஆதரவளிப்பதற்காக துருக்கி தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். “ஸ்திரமான, ஜனநாயகமான மற்றும் அபிவிருத்தி அடைந்த ஒரு துருக்கி அனைத்து முஸ்லிம் சக்திக்கான ஆதாராமாக உள்ளது” என்று துருக்கியின் ஆளும் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி மாநாட்டில் பங்கேற்று மிஷால் குறிப்பிட்டார். “வலுவான துருக்கி என்பது வலுவான ஜரூசலம், வலுவான ஒரு பலஸ்தீனமாகும்” என்று குறிப்பிட்ட அவர் பலஸ்தீன,…

Read More

கல்முனையில் மைத்ரிக்காக வெள்ளமாய் அணிதிரண்ட மக்கள் (படங்கள் இணைப்பு)

எஸ்.ஏ. கான் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறி சேனவை ஆதரித்து, கல்முனை பிரபல வர்த்தகரும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பறக்கத்துள்ளாஹ்வின் சகோதரருமான ஏ.எம்.பைரூஸின் ஏற்பாட்டில் கல்முனை கடற்கரைப்பள்ளி வளாகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (29)  மாலை நடைபெற்ற கூட்டத்தில் வரலாறு காணாத மக்கள் பெரு வெள்ளமாய் அணிதிரண்டிருந்தனர். சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அங்கு குழுமியிருந்தனர். இங்கு பிரதம அதிதியாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார். இதேவேளை இன்றைய தினம் ஸ்ரீலங்கா முஸ்லிம்…

Read More

அதாவுல்லாவின் கோட்டையில் ரணில் விக்கிரமசிங்க – கூட்டம் நிரம்பி வழிந்தது (படங்கள் இணைப்பு)

எம்.ஏ.றமீஸ் யுத்தத்தின் பின்னர் மக்களை ஒற்றுமைப்படுத்துவதற்குப் பதிலாக இன மத வாதங்களைத் தூண்டி மீண்டும் ஒரு யுத்தத்தைத் தோற்றுவிக்க மஹிந்த ராஜபக்ஷ முற்படுகின்றார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து அக்கரைப்பற்று மணிக்கூட்டுக் கோபுர சுற்றுவட்டாரத்தில்  நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இக்கூட்டத்தின்போது அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இந்த நாட்டில் வாழும் அனைவரது உரிமைகளையும் பாதுகாக்கும் முகமாக சந்திரிக்கா பண்டாரநாயக்க மைத்திரிபால…

Read More

சம்மாந்துறையில் மைத்திரி பங்கேற்ற, தேர்தல் பிரச்சாரத்தில் வரலாறு காணாத மக்கள் வெள்ளம் (படங்கள்)

யு.எல்.எம். றியாஸ் எதிரணிகளின் ஜனாதிபதி  பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று (28.12.2014) மாலை சம்மாந்துறை வருகை  சம்மாந்துறை அம்பாறை பிரதான வீதியில் மாபெரும் பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றது. இப்பிரச்சாரக் கூட்டத்திற்கு வருகை தந்த மக்கள் வெள்ளத்தினை  படங்களில் காணலாம்.

Read More

புறப்படுங்கள்..

மிஹ்வார் அஹமட் மஹ்ரூப் இன்றைய சூழலில் நமது உரிமைகளை வாக்குகள் மூலம் வென்றெடுப்பதும் ஒரு போராட்டமாகவே இருக்கின்றது. ஒரே நாட்டில் பிறந்து வாழும் நம்மிடையில் மக்கள் கணக்கெடுப்பில் மட்டுமே பிரயோகிக்கப்பட்ட “சிறுபான்மை” “பெரும்பான்மை” என்ற வார்த்தை பிரயோகம், கடந்த காலத்தில் உருப்பெற்று அரசாங்கத்தினால் வளம்பெற்று வாழும் இயக்கத்தின் கொள்கைவாதிகளினால் இனக்கலவரமும், உயிர், சொத்து என அனைத்து வகையான சேதங்களையும் பார்த்துவிட்டோம். தமது சுயநலத்திற்காக சிறுபான்மை மக்கள் மீது அபாண்டமான பொய்களை சுமத்தி தமது இருப்பை உறுதி செய்துகொள்வதற்கு…

Read More

றிஷாத் – ஹக்கீம் தொலைபேசியில் மனம் விட்டு உரையாடினர்

இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் ஸ்ரீலங்கா முஸ்லிம் நேற்று அரசாங்கத்தில் இருந்து விலகி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கும்,நாட்டின் நல்லாட்சிக்குமாக எடுத்திருக்கும் முடிவை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,முன்னால் அமைச்சருமான றிசாத் பதியுதீன் வரவேற்றுள்ளதுடன்,தமது பாராட்டினையும் தெரிவித்துள்ளார். நேற்று இடம் பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடத்தின் கூட்டத்தினையடுத்து கட்சியின் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள்,தாம் அரசாங்கத்தில் இருந்து விலகி பொது வேட்பாளருடன் இணைந்து கொள்வதாக அறிவித்ததையடுத்து,அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய…

Read More

றிஷாத் பதியுதீனுக்கு எதிராக வழக்கு

அஸ்ரப் ஏ சமத் மன்னார் அண்டிய வில்பத்து காட்டில் முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுத்தீன், சட்டவிரோதமாக காடுகளை அழித்து கட்டடங்களையும் வீடுகளையும் அமைத்துள்ளதாகவும் அதற்கு எதிராக வனவளத் திணைக்களம் றிசாத் பதியுத்தீனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகம் மேற்படி விடயமாக சகல தஸ்தவேஜிகளை சேகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. இவ் விடயம் சம்பந்தமாக இன்று வெளிவந்த சிங்கள இதழான மவ்பிம பத்திரிகையில் முற்பக்கத்தில் அமைச்சர் றிசாத்தின் படத்தை பிரசுரித்து செய்தி வெளியிட்டுள்ளது. இவ் வீடமைப்புத்திட்டத்தினை அமைப்பதற்காக அமைச்சர் றிசாத் அதிகாரிகளுக்கு…

Read More