Headlines

தாக்குதல் மேற்கொள்ளுபவர்களைப் பொலிசார் பாதுகாக்கின்றனர் ; கபே

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுவதை தடுப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சி அலுவலகம் மீது மேற்கொள்ளப்பட்ட திட்டமிடப்பட்ட தாக்குதலை கண்டிப்பதாக தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பாக கபே வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் குறித்த அறிவிப்பிற்கு பின்னர் முக்கிய எதிர்கட்சிகளும், அவற்றின் செயற்பாடுகளும் மிரட்டல், அச்சுறுத்தல், வன்முறை தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளன, அதன் உச்சக்கட்டமே சிறிகோத்தா மீதான தாக்குதல். குறிப்பிட்ட தாக்குதல் ஐக்கிய தேசிய…

Read More

மைத்திரியின் வெற்றிக்காக முஸ்லிம்கள் பாடுபட வேண்டும் – றிஷாத் பதியுதீன்

-எம்.வை.அமீர்,எம்.ஐ.சம்சுதீன், அஷ்ரப்கான், ஹாசிப் யாஸீன்- தற்போது ஆட்சியில் இருக்கின்ற அரசு, இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு இளைத்த அநீதிக்கு எதிராக, தாங்கள் இந்த அரசு மேல் கொண்ட அதிருப்தியினால் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொறுப்புவாய்ந்த அமைச்சுப்பதவி மற்றும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் பதவிகள் எல்லாவைரையும் விட ஜனாதிபதியின் சகோதரர் பஸில் ராஜபக்சவின் உண்மையான நட்பு இவையெல்லாவற்றையும் துறந்து தாங்கள் வெளியேறி வந்ததை அங்கீகரிப்பது போல் பெரும் திரளான மக்கள், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது வந்திருப்பதை தான் பெரிதும் மதிப்பதாகவும் பெரும்…

Read More

பதவியேற்ற நேரம் முதல் இன, மத, மொழி, பேதங்களுக்கு இடமளிக்கமாட்டேன் – மைத்திரிபால

நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்து ஜனாதிபதியின் பதவிக்காலம் நான்கு வருடங்களுக்கு மட்டுப்படுத்தப்படுமெனத் தெரிவித்திருக்கும் எதிரணி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தனது பதவிக்காலம் ஒரு தடவையாக மட்டுமே இருக்கும் எனவும் குறிப்பிட்டிருக்கிறார். கொழும்பு வர்த்தகக் கண்காட்சி மண்டபத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற தேசிய ஐக்கிய அமைப்பின் முஸ்லிம் சமூக ஒன்றுகூடலில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். உலக நாடுகளில் ஜனாதிபதியின் பதவிக்காலம் 4 அல்லது ஐந்து வருடங்களேயாகும். எமது நாட்டில் மட்டுமே அது ஆறு வருடங்களாக உள்ளது. நான்…

Read More

இஸ்லாமிய நிர்வாக குழுவின் விஜயம் ரத்து

இஸ்லாமிய கூட்டுத்தாபன நிர்வாக குழுவின் இலங்கை வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் நிமித்தம் இஸ்லாமிய கூட்டுத்தாபன செயலாளர் நாயகம் இயாட் அமீன் மதானியின் இலங்கை விஜயம் பிற்போடப்பட்டதாக ரியாத்திலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் 65 வது அமர்வின் போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்புக்கு இணங்க செயலாளருடன் 4 தூதுவர்கள் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவிருந்தனர். இஸ்லாமிய கூட்டுத்தாபனத்தின் உயர்மட்ட அதிகாரியொருவர் இலங்கை வருவது இதுவே முதன்முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வரும் குறித்த…

Read More

முஸ்லிம் அரசியல் வாதிகள் , றிஷாத் பதியுதீனிடம் அரசியல் பாடம் கற்க வேண்டும்

K.C.M.அஸ்ஹர் (முசலியூர்) இன்று அரசியல் புலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் , அமைச்சர்களாகவும் , சிரேட்ட அமைச்சர்களாகவும் இருக்கின்ற மக்கள் பிரதிநிதிகள் முந்நாள் அமைச்சர் றிசாத் பதியுதீனிடம் அரசியல் படிக்க வேண்டும்.ஒப்பீட்டு அளவில் இளம் வயது உடைய அவர் அரசியலில் சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளார். கோடிக்காக கட்சி மாறும் யுகத்தில் மக்களுக்காக மக்களின் அனுமதியுடன் கட்சி மாறிய இவரை இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் தேசியத்தலைவராக உயர்த்தி வைத்துப் பார்க்கின்றனர். அரசில் இருந்து கொண்டே தம்புள்ளை முதல் அளுத்கமை வரை…

Read More

கொட்டும் மழையிலும் றிஷாத் பதியுதீனை காண திரண்டனர் கல்முனை மக்கள்

முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீனின் கிழக்கு மாகாண விஜயத்தின்போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஏற்பாட்டில் கல்முனையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் இன்று இரவு 9 மணிக்கு வருகை தந்து உரையாற்றினார். இக்கூட்டத்திற்கு வரலாறு காணாத மக்கள் வெள்ளம் (கொட்டும் மழை வெள்ளத்திலும்) திரண்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. இங்கு குழுமியிருந்த மக்கள் முஸ்லிம் சமூகத்தின் மறைந்த தலைவர் அஷ்ரபிற்குப் பிறகு சமூகத் தொண்டனாக தங்களை பார்ப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்…

Read More