Headlines

ஏறாவூரில் றிஷாத் பதியுதீனுக்கு ஊர்கூடி உணர்ச்சிபூர்வமான வரவேற்பு

ஏ.எச்.எம்.பூமுதீன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர் றிஷாத் பதியுதீன் இன்று கிழக்கிற்கான தனது பயணத்தை மேற்கொண்டார். இதன்போது ஏறாவூருக்கு விஜயம் செய்த தேசியத் தலைவன் றிஷாத் பதியுதீனுக்கு ஏறாவூர் மக்கள் ஊரோடு ஒன்றிணைந்து உணர்ச்சி பூர்வ வரவேற்பளிப்பதை படத்தில் காணலாம்.

Read More

சீத்தாவக்கை பிரதேச சபையின் அதிகாரத்தை இழந்த அரசு

சீத்தாவக்கை பிரதேச சபையின் ஆளும்கட்சி உறுப்பினர்களில் ஐவர், பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்ததையடுத்து அந்த பிரதேச சபையின் பெரும்பான்மையை அரசு இழந்துள்ளது. ஐந்து உறுப்பினர்கள் எதிரணிக்கு மாறியதையடுத்து அந்த பிரதேச சபையில், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதுடன் ஆளும் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 9 ஆக குறைந்துள்ளது. இதன்பிரகாரம் அந்த பிரதேச சபையில் எதிரணிக்கே பெரும்பான்மை இருக்கிறது.

Read More

கட்சி மாறும் ஆளும் தரப்பினர்; கலக்கத்தில் அரசு

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினைச் சேர்ந்த உள்ளூராட்சி உறுப்பினர்கள், கட்சி பிரதேச அமைப்பாளர் உள்ளிட்ட 20 பேர் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அந்த வகையில் வடமத்திய மாகாணசபை ஆளுங்கட்சி உறுப்பினர் பி.பி.திஸாநாயக்க, அனுராதபுரம் பிரதேச சபையின் 12 உறுப்பினர்களுமாக 13 பேர், திம்பிரிகஸ்யாயவில் உள்ள பொது வேட்பாளர் அலுவலகத்திற்கு சென்று எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளனர். அத்துடன் அநுராதபுரம் மாவட்ட ஜயஅபிமானி அமைப்பின் தலைவர் ஆர்.பி.ஞானதிலக…

Read More

பெண்­க­ளின் ஆடை­களைக் களையும் அள­வுக்கு, உயர் கல்வியமைச்சரின் தரம் மாறி­யுள்­ள­து – ரோசி சேனா­நா­யக்க

கௌர­வ­மான பெண்­க­ளது ஆடை­களைக் களைந்து அவர்­களை நிலத்தில் போட்டு மிதிக்க வேண்டும் என்­ற­ள­வி­லான கதை­களைக் கூறும் அள­வுக்கு எமது உயர் கல்வி அமைச்சின் தரம் மாறி­யுள்­ள­தென பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரோசி சேனா­நா­யக்க விசனம் தெரி­வித்தார். கண்டி, ஸ்ரீ புஷ்­ப­தான மண்­ட­பத்தில் இடம்­பெற்ற கூட்டம் ஒன்­றி­லேயே அவர் இதனைத் தெரிவித்தார். ஆக்­கூட்­டத்தில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, இன்று உயர் கல்வி அமைச்­சிற்குப் பாரி பல பொறுப்­புக்கள் உண்டு. நாட்டின் இளைஞர், யுவ­தி­க­ளது பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கு திட்­ட­மிட வேண்­டி­ய பல்­வேறு…

Read More

கத்தார் நாட்டில் தொடர் கதையாகும், வெளிநாட்டு பணியாளர்களின் இறப்பு

வரும், 2022ம் ஆண்டில், உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடைபெற உள்ளது. இதற்காக, பல நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பணியாளர்கள் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். இவர்களில் பலர், அவ்வப்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மரணமடைவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, நேபாளத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தான் அதிகளவில் கட்டுமான பணிகளில் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளதாக, கார்டியன் நாளிதழ் சுட்டிகாட்டியுள்ளது. நேபாள தொழிலாளர்கள்: இதன்படி, நடப்பாண்டில், ஜனவரி – நவம்பர் வரையில் மட்டும், நேபாளத்தைச் சேர்ந்த,…

Read More

றிஷாத் பதியுத்தீனுக்கு பாடம்புகட்ட மஹிந்தவின் வெற்றியில் பங்காளர்களாக வேண்டுமாம் – கூறுகிறார் அப்துல் காதர்

எம்.ஏ. அமீனுல்லா அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாத் பதியுத்தீனின் நடவடிக்கையால் இந்நாட்டில் வாழும் முழு முஸ்லிம் சமூகத்திற்கும் அபகீர்த்தி ஏற்பட்டிருப்பதாக சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம். அப்துல் காதர் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுத்தீனுக்கு தக்க பாடம் புகட்டும் வகையில் எதிர்வரும் 8ம் திகதி நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் சகல முஸ்லிம்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அமோக வெற்றியில் பங்காளர்களாக வேண்டும் என அவர் கேட்டுள்ளார். இது தொடர்பாக…

Read More

நிந்தவூரில் கொள்ளை

மு.இ.உமர் அலி + சுலைமான் றாபி நிந்தவூர் பிரதான வீதி ஜூம்மாப்பலள்ளிவாசலுக்கு முன்னாள் அமைந்துள்ள தனியாருக்குச்சொந்தமான கடைத்தொகுதிகளில் உள்ள இரு வெவ்வேறு கடைகள் நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால்   பூட்டுக்களை உடைத்து கொள்ளை இடப்பட்டுள்ளன. FANCY PARK எனப்படும்  வீட்டுப்ப்பாவனை மற்றும் ஆடம்பர பொருட்கள் விற்கும் நிறுவனமும், FAROOK STORS (மாத்தையாட மகனின் கடை )எனப்படும்  மிகவும் பிரபல்யமான மொத்த சில்லறை பலசரக்குக்கடையுமே இவ்வாறு உடைத்துக் கொள்ளையிடப்பட்டுள்ளது. இரவு பதினொரு மணியளவில் கடை உரிமையாளர்கள் கடைகளை மூடிவிட்டுச்சென்றிக்கின்றார்கள் ,இன்று அதிகாலை…

Read More

தேசியத் தலைமையின் கிழக்குப் பயணம் இன்று ஆரம்பம்

ஏ.எச்.எம். பூமுதீன் சமுகத்தின் விடுதலைக்காகவும் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அடிமைத்தனத்திலிருந்து சமுகத்தை மீட்டெடுக்கவும் புறப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர் றிஷாத்  பதியுதீனின்; கிழக்கிற்கான  பயணம் இன்று ஆரம்பமாகின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசிலிருந்து வெளியேறி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க முன்வந்ததன் பிற்பாடு தலைவர் ரிசாத் மேற்கொள்ளும் முதலாவது சமுக விடுதலைக்கான பிரச்சாரப் பயணம் இதுவாகும். இன்று (2014-12-25) காலை கொழும்பிலிருந்து புறப்பட்ட தேசியத் தலைவர் ரிசாத் பதியுதீன் முதலாவதாக காத்தான்குடிக்கு விஜயம்…

Read More

எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் ஜனாதிபதிவே பொறுப்பு – றிஷாத் பதியூதீன்

ஏ.எச்.எம்.பூமுதீன் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே பொறுப்புக்கூற வேண்டும் என முன்னாள் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாத் பதியூதீன் தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர், மேலும் தெரிவித்தவை வருமாறு, பொது பல சேனாவின் முஸ்லிம் விரோத எதிர்ப்பு நடவடிக்கைகளால், நாட்டில் சிங்கள, முஸ்லிம், தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது என நாம் அஞ்சினோம். அளுத்கம தாக்குதல்…

Read More