Headlines

முஸ்லிம் சமுகத்திற்காக அனைத்தையும் துறந்துள்ளோம் – றிஷாத் பதியுதீன்

A.S.M.இர்ஷாத் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் காரியாலயத்தில் இன்று புதன்கிழமை(24) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீன் விளக்கமளித்தார். இதில் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட், மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், றியாஸ் சாலி, ஹூசைன் பைலா ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.

Read More

சற்று முன் “19 ஆளும் கட்சி உறுப்பினர்கள்” மைத்திரி பக்கம்

அனுராதபுர மாவட்ட ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் மாநகர சபை உறுப்பினர் ஒருவரும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் 18 பேரும் இன்று சற்றுமுன் பொது எதிரணியில் இணைந்து கொண்டனர். திம்பிரிகஸ்யாய பொது வேட்பாளர் ஆதரவு கட்சிக் காரியாலயத்தில் தற்போது நடைபெறும் ஊடக மாநாட்டில் பொது வேட்பாளரருக்கு ஆதரவு வழங்குவது பற்றி அவர்கள் அறிவித்தனர்.

Read More

சிரியாவில் இஸ்ரேல் உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது

சிரியாவில் உள்ள கோலன் ஹெய்ட்ஸ் பகுதியை கடந்த 1967–ம் ஆண்டு முதல் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளது. இது சிரியாவின் கியூனேத்ரா மாகாணத்தில் உள்ளது. இந்த ஆக்கிரமிப்பை சர்வதேச நாடுகள் அங்கீகரிக்கவில்லை. இந்த நிலையில் நேற்று இப்பகுதியில் சிரியா எல்லையில் இஸ்ரேலின் ஆளில்லாமல் இயங்கும் விமானம் பறந்தது. அதை கண்காணித்த சிரியா ராணுவம் அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியது. இது ஸ்கைலார்க்–1 மாடல் விமானமாகும். இது கோலன் கெய்ட்ஸ் பகுதியில் ஹாடர் கிராமத்தில் சுடப்பட்டதாக சிரியா ராணுவம் அறிவித்துள்ளது. இதுகுறித்து…

Read More

மாயமான மலேசிய விமானத்தை, அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது – முன்னாள் தலைமை அதிகாரி தகவல்

கடந்த மார்ச் 8 ஆம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் 370 என்ற ஜெட் விமானம், சீனாவின் பீஜிங் நகருக்கு சென்ற போது மாயமானது. மாயமான அந்த விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என்றும், பயணிகள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. விமானத்தை தேடும் பணியில், ஆஸ்திரேலியா, சீனா மற்றும் மலேசியா நாட்டை சேர்ந்த மீட்பு குழு ஈடுபட்டது.ஆனால் அந்த முயற்சி தோல்வியை அடைந்தது. இன்று வரை விமானம் என்ன ஆனது என்ற…

Read More

மைத்திரி, ரணிருடன் இணைந்து நாடு பூராகவும் தேர்தல் பிரச்சாரம் – றிசாத் பதியுதீன் அறிவிப்பு

இன்னும் சில தினங்களில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனா மற்றும் ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் இணைந்து நாடு பூராகவும் பிரச்சார பணிக்ளை ஆரம்பிக்கவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். 23 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்ளிப்பில் கலந்துகொண்ட முஸ்லிம் வாக்களார்கள் பலர் எனக்கு குறுஞ்செய்திகளை அனுப்பியிருந்தனர். அவர்கள் மைத்திரிபால சிறிசேனவுகுத்தான் வாக்களித்துள்னர். இந்நிலையில் எதிர்வரும் தினங்களில் மைத்திரிபால சிறிசேனாவை ஜனாதிபதியாக்கும் முழு…

Read More

றிஷாத் பதியுதீனின் வாகனத்தை பின்தொடரும் மர்ம நபர்கள்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியுதீனின் வாகனத்தை சில மர்ம நபர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். இன்று அவருடைய இல்லத்திற்கு வருகை தந்த ஊடகவியாளர்களிடம் இவர் இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தாவது ‘தனது குடும்பத்தினர் நேற்று அரசின் பிரத்தியேக இல்லத்தை விட்டு வேறு இடத்திற்கு சென்று கொண்டிருக்கும் போது சில மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் எனது குடும்பத்தினர் சென்ற வாகனத்தை பின் தொடர்ந்து சென்றதை அவதானிக்க முடிந்தது. அதே போன்று எனது…

Read More

மைத்திரிக்கு ஆதரவு தெரிவித்து முஸ்லிம்கள் சார்பாக மாபெரும் கூட்டம்

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறினோவை ஆதரித்து முஸ்லிம்கள் சார்பில் மாபெரும் பொதுக் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. லேக் ஹவுஸுக்கு முன்னால் டி.ஆர். விஜயவர்த்தன மாவத்தையில் அமைந்துள்ள கண்காட்சி கேட்போர் கூடத்தில் இந்த பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யபட்டுள்ளது. 25ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு இக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதனை ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர் தலைமையிலான தேசிய ஐக்கிய அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இக்கூட்டத்தில் கொழும்பிலுள்ள முஸ்லிம்களும், நாட்டின் ஏனைய பகுதி முஸ்லிம்களும் பங்குகொள்ள முடியுமென ஏற்பாட்டாளர்கள்…

Read More

கிழக்கு மாகாண சபை முதல்வர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு

கிழக்கு மாகாண சபை முதல்வர் பிரியந்த பத்திரண, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளார். கொழும்பில் தற்போது நடைபெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Read More

உயர்தர பரீட்சை பெறுபேறு வெளியாகிறது!

நடந்து முடிந்த க.பொ.த உ/த பரீட்சை பெறுபேறு எதிர்வரும் 27 அல்லது 28ம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவுற்று தற்போது பெறுபேறுகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்தார். இதேவேளை, க.பொ.த சா/த பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 28ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு ஜனவரி 5ம் திகதிவரை மேற்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

Read More

மத்திய கொழும்பில் 15,000 வாக்குகளுக்கு என்ன நடந்தது ? பைரூஸ் ஹாஜி

கொழும்பிலிருந்து, ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் மத்திய கொழும்பில் 145,000 வாக்குகள் இருந்தது. ஆனால் இப்போது 130,000 வாக்குகளே பதியப்பட்டுள்ளது. 15000 வாக்குகளுக்கு என்ன நடந்தது? என்பதே தெரியாத ஒரு நாடகமாகவே இருக்கின்றது. இவ்வாறு மேல்மாகாண சபை உறுப்பினரும் மத்திய கொழும்பு ஐக்கிய தேசியக் கட்ச்சியின் அமைப்பாளருமான பைரூஸ் ஹாஜி, மைத்திரிபாலா சிறிசேனவின் வெற்றியை மத்திய கொழும்பில் உறுதிப்படுத்தும் முகமாக கிரான்பாஸ் மெல்வத்த மாவத்தை வீட்டுத் தொகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்த்திப்புடனான பொதுக்கூட்டத்தில் தெரிவித்தார். இக்கூட்டத்துக்கு விக்ரமபாகு கருனாரத்ன…

Read More