Headlines

றிஷாத் பதியுதீன் மைத்திரியுடன் சற்று முன்னர் இணைந்தார்

அமைச்சர் றிஷாத் பதியுதீன் பொதுவேட்பாளருடன் சற்று முன்னர் இணைந்தார். அ.இ.ம.கா தலைவர் ரிசாத் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி உட்பட அ.இ.ம.காவின் 73 மக்கள் பிரதிநிதிகள் சற்று முன்னர் பொதுவேட்பாளர் மைத்திரிபாலவுடன் இணைந்தனர். இந்நிகழ்வு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரம சிங்கவின் ஊடக காரியாலத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றது. ரணில் விக்கரமசிங்க ,சந்திரிக்கா பண்டாரனாயக்கா, ராஜித மற்றும் அஸாத் சாலி என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

Read More

முஸ்லிம்கள், மைத்திரிபால சிறிசேனாவை நம்பக்கூடாது, மஹிந்தவை நம்புங்கள் – அஸ்வர்

மைத்திரி அணியில் சேர்ந்துள்ளவர்கள் முஸ்லிம்களுக்கும். சிறுபான்மை மக்களுக்கும் எதிராகச் செயற்படுபவர்கள். மைத்திரியுடன் சேர்ந்துள்ள ஹெல உறுமய செயலாளர் சம்பிக்க ரணவக்கவின் ஒப்பந்தத்ததில் சிறுபான்மை மக்கள் நலன் பேணல் பற்றி ஒன்றுமே குறிப்பிடப்படவில்லை. இது குறித்து சிறுபான்மை மக்கள் தெளிவு பெற்று வாக்கை சரியாகப் பயன்படுத்த வேண்டும். ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகார. தகவல் ஊடக சிரேஷ்ட ஆலோசகர் ஏ. எச். எம். அஸ்வர் இவ்வாறு கூறினார். ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் ஜனாதிபதி சகிதம் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று…

Read More

மைத்திரிபாலவின் புதிய அமைச்சரவை விபரம் – சண்டேலீடர் பத்திரிகை தகவல் (விபரம் இணைப்பு)

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் புதிய தேசிய  அரசாங்கம் அமைக்கப்படும் என்று பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ள நிலையில், அந்த அரசாங்கம்  18 அமைச்சர்களைக் கொண்டதாக இருக்குமென்று ஊகங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான தகவல் கசிந்திருப்பதாக “சண்டே லீடர்’ நேற்று ஞாயிற்றுக்கிழமை  தெரிவித்துள்ளது. புதிய அரசாங்கத்தில்  மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் பதவி வகிப்பார்களென ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேசமயம் சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்பும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு நிதியும் அத்துரலிய ரத்ன தேரருக்கு…

Read More

அரசு என்னை கொலை செய்ய முயற்சி: மைத்திரி

தமக்குள்ள பாதுகாப்பை அகற்றி விட்டு அரசு என்னை கொலை செய்யவே முயற்சிக்கிறது என எதிரணியின்  பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கலகமுவையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில்  பேசுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி வேட்பாளர் என்ற வகையில் தனக்கான பாதுகாப்பிற்கு 7  பாதுகாப்பாளர்கள் வழங்கப்பட்டுள்ளனர். ஆனால் மகிந்த ராஜபக் ஷவிற்கு எந்தளவு பாதுகாப்பு உள்ளது என்பதை மக்கள் அறிந்துள்ளனர். எனினும் மக்களின் ஆதரவு பாதுகாப்பும் எனக்கிருப்பதால் நான் எவ்வித அச்சமும் கொள்ளவில்லை….

Read More

மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதி மாளிகைகளை நிர்மாணிக்க பெருமளவு பணத்தை செலவிட்டுள்ளார் – மைத்திரிபால சிறிசேன

மக்களின் துயரங்களை அறிந்த தலைவன் என்ற வகையில் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உறுதி வழங்கியுள்ளார்.நேற்று நடைபெற்ற கூட்டமொன்றின் போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கண்டி திகண பகுதியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சியின்  பிரதிநிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். அங்கு உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, ஜனாதிபதி மாளிகைகளை நிர்மாணிக்க…

Read More

மக்களைப் பற்றி சிந்தித்தே நாம் அரசாங்கத்திலிருந்து வெளியேறினோம்

ஏன் ஜக்கிய தேசிய கட்சிக்கு நானும் அல்லது நவீன் திசாநாயக்க உட்பட மற்றவர்களும் வந்தார்கள் என்பது பலருக்கும் புரியாமல் உள்ளது.அதற்கு காரணம் இந்த நாட்டில் நடக்கும் அநீதிகளை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது.நாங்கள் நினைத்திருந்தால் அரசாங்கத்தின் வரப்பிரசாதங்களை அனுபவித்துக் கொண்டு அங்கிருந்திருக்கலாம். ஆனால் மக்களை பற்றி சிந்தித்ததன் காரணமாகவே அரசாங்கத்தைவிட்டு வெளியில் வந்தோம் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீ. இராஜதுரை தெரிவித்துள்ளார். நுவரெலியா மாநகர சபையின் புதிய நகர மண்டபத்தில் நடைபெற்ற பொது வேட்பாளரை…

Read More

பிரதான நீர்த்தேக்கங்கள் சிலவற்றின் வான்கதவுகள் திறப்பு

கடும் மழையை அடுத்து பிரதான நீர்த்தேக்கங்கள் சிலவற்றின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.விக்டோரியா, ரன்தெனிகல மற்றும் ரன்டெம்பே அகிய நீர்த்தேக்கங்களில் தலா இரண்டு வான் கதவுகள் வீதம் திறக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட இடர் முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எஸ்.எச்.முதித்த மஞ்சுல கூறியுள்ளார்.இதனால் குறித்த நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதிகளில் மகாவலி கங்கையை பயன்படுத்துவோர் விழிப்புடன் இருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தல்  விடுத்துள்ளார். மழைக் காரணமாக மகாவலி திட்டத்திற்குரிய கண்டலம, கலாவாவி, நாச்சாதீவு, இராஜாங்கனை, நுவரவாவி, திசாவாவி, உல்ஹிட்டிய மற்றும்…

Read More

நவநீதம்பிள்ளையிடம் குவிந்த 15,000 கடிதங்கள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் முன்னாள் ஆணையர் நவநீதம்பிள்ளைக்கு போர்க்குற்றச் செயல்கள் தொடர்பாக 15,000 கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. போர்க்குற்றச் செயல்கள் மற்றும் காணாமல் போனது தொடர்பாக சாட்சியங்கள் அடங்கிய கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடத்தப்பட்ட காணாமல் போனவர்களின் மற்றும் உயிரிழந்த பெற்றோர் அமைப்பு இந்த கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது. நவநீதம்பிள்ளையினால் நியமிக்கப்பட்ட போர்க்குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைக் குழுவினர் இந்த கடிதங்களை பரிசீலனை செய்து விசாரிப்பார்கள் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று…

Read More

சவுதியில் இலங்கை பெண் தற்கொலை

சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் புரிந்து வந்த இலங்கை பெண்ணொருவர் அவர் பணியாற்றிய வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.இந்த பெண் வீட்டில் உள்ள குளியலறையில் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதுடன் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குளியலறை கதவு நீண்ட நேரம் திறக்கப்படாததால், வீட்டு எஜமான் கதவை தட்டியுள்ளார். உள்ளே இருந்து பதில் எதுவும் கிடைக்காத நிலையில், அவர் கதவை உடைத்து திறந்த போது பெண் இறந்து கிடந்துள்ளார்….

Read More