யாழ்ப்பாண முஸ்லீம்கள் சகல விடயங்களிலும் பின்தள்ளப்பட்டுள்ளனர் – ரிப்கான் பதியூதின்
யாழ் முஸ்லீம்கள் அனைத்து விடயங்களிலும் பின்தள்ளப்பட்டுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியூதின் தெரிவித்துள்ளார். நேற்று 19-12-2014 மாகாண சபையில் நடைபெற்ற வரவு செலவு திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கடந்த சில தினங்களிற்கு முன்னர் அம்மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டனர்.ஆனால் இது வரை பொறுப்பு வாய்ந்தவர்கள் இதுவரை சென்று பார்க்கவில்லை.எனவே இனி வரும் காலங்களில் அவர்களை எம்மக்களாக சென்று பார்வையிட வேண்டும்.அவர்களிற்கு உதவ வேண்டும்.அனைத்து விடயங்களிலும் உள்வாங்க வேண்டும்….
