Headlines

புதிய ஆலோசகர் நியமிப்பு

காணாமல்போனோர் தொடர்பான விசாரணைகளை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்க மற்றுமொரு வெளிநாட்டுநிபுணர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜப்பானைச் சேர்ந்த விசேட நிபுணரான மோதோ நபூச் புதிய ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

Read More

புதிதாக 10 விமானங்கள் கொள்வனவு

புதிதாக 10 விமானங்களை கொள்வனவு செய்வதற்கு சிவில் விமான சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவையின் விமானங்கள் பிரிவிற்கு வலுச்சேர்க்கும் நோக்கிலேயே இந்த விமானங்களை கொள்வனவு செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் டொக்டர் ரவீந்திர ருபேரு குறிப்பிட்டார். ஸ்ரீலங்கன் விமான சேவைக்கென தற்போது 23 விமானங்கள் காணப்படுவதாகவும் அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

Read More

தோல்வியுற்றால் விலகிவிடுவேன் ; மஹிந்த

ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்றால் எந்தத்த தயக்கமும் இன்றி அதிகாரத்தை ஒப்படைத்துவிடுவேன் என்று ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்ச கத்தோலிக்கத் திருச்சபைக்கு வாக்குறுதி வழங்கியுள்ளார். இந்தத் தேர்தலில் போட்டியிடும் இரண்டு பிரதான வேட்பாளர்களும் , வன்முறைகளற்ற தேர்தல் இடம்பெறும் என்று தமக்கு வாக்குறுதி அளித்துள்ளதாககக் கத்தோலிக்கத் திருச்சபையின் கொழும்பு மறை மாவட்ட கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

Read More

அரசிலிருந்து கூட்டிலிருந்து வெளியேறும் மு.கா

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசின் பங்காளிக் கட்சியான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதிலிருந்து வெளியேறத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மகிந்த அரசிலிருந்து வெளியேறும் முஸ்லிம் காங்கிரஸ் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரி பால சிறிசேனாவை ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுக்கவுள்ளது எனவும் அறியமுடிகிறது(ou)

Read More

இரு சீறுநீரங்களும் பாதிக்கப்பட்ட சகோதரி அவசர உதவியை நாடுகிறார்

சாயந்தமருது -17 குத்தூஸ் வைத்திய வீதியைச் சேர்ந்த 31 வயதுடைய எஸ். ஏ. நளீறா என்ற பெண்மணி இரு சீறுநீரங்களும் பாதிக்கப்பட்டு கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருடைய உடல் நிலை பாதிப்பை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அவசரமாக தனியார் வைத்தியசாலையில் சிறுநீராக மாற்று அறுவைச் சிகிச்சை  செய்யுமாறு வைத்தியஅதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார். எனவே இதன் பிரகாரம் வைத்திய செலவுக்காக 35 இலட்சம் ரூபா செலவு தேவை ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வறிய குடும்பத்தைச் சேர்ந்த இந்தப் பெண்மணி…

Read More

ரவூப் ஹக்கீமுக்கு, லக்ஷ்மன் கிரியல்ல பகிரங்க சவால்..!

அஷ்ரப் ஏ சமத் இலங்கையில் இருநூற்று ஐம்பது பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்டுள்ளதாக ஐ நா சபைக்கு முறைப்பாடு அனுப்பிய நீதி அமைச்சர் ஹக்கீம் பள்ளிகள் உடைக்கப்பட்டதற்காக இலங்கையில் என்ன நீதியை நிலைநாட்டியுள்ளார் என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல கேள்வி எழுப்பினார். கண்டி மஹியாவ பிரதேசத்தில் நடந்த மக்கள் சந்திப்பில் கருத்து வெளியிட்ட  கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல, ராஜபக்ஷ குடும்பத்துக்கு அதரவு வழங்குவதை  ஞாயம் கற்பிக்க கடந்த வாரம் அலறி மாளிகையில்…

Read More

அரசாங்கம் வழங்கும் சகலவற்றையும் பெற்றுக்கொண்டு எனக்கு வாக்களியுங்கள் – மைத்திரிபால

அரசாங்கம் இலவசமாக வழங்கும் சகலவற்றையும் பெற்றுக்கொண்டு ஜனவரி 8 ஆம் திகதி தனக்கு வாக்களிக்குமாறு பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பொலன்நறுவையில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அனுராதபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான மக்களை வரவழைக்க முடிந்ததாக ஜனாதிபதி பெருமை பேசி வருகிறார். ஆனால் அந்த மக்கள் கூட்டம் அழைத்து வரப்பட்ட கூட்டம். எதிர்வரும் நாட்களில் செல்போன்கள், சேலைகள் மற்றும்…

Read More