Headlines

ரணிலை பிரதமராக்குவதில் சிக்கல், சந்திரிகா நெருக்கடியில் – பல்டிக்கு தயாரானோர் பீதி

நான் ஜனாதிபதியானால் ரணிலை பிரதமராக்குவேன் என்று பொது எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட அறிக்கையால் ஆளும் கட்சியிலிருந்து பொது எதிரணியுடன் இணைய விருப்பம் தெரிவித்த  உறுப்பினர்கள் சிலர் சந்திரிகாவிற்கு நெருக்கடி கொடுத்து வருவதாக தெரியவருகிறது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிக்கப்படுமென பொதுஎதிரணி  பிரச்சாரம் செய்து வருகிறது. மைத்திரிபால ஜனாதிபதியானால் அதிகாரங்கள் பகிரப்பட்டு பிரதமர் ஆட்சி நடக்கலாம். ஆனால் பிரதமர் ரணிலாக இருந்தால் நாம் வெளியேற மாட்டோம். மைத்திரி கூறிய வார்த்தையை மீளப்பெற்று பிரதமர் யார்…

Read More

மஹிந்த ராஜபக்ஷவுக்குகே ஆதரவு நல்க வேண்டுமாம் கூறுகிறார் அப்துல் காதர்

இந்நாட்டு முஸ்லிம்கள் எப்போதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குமே ஆதரவு நல்க வேண்டும் என்று சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம். அப்துல் காதர் தெரிவித்துள்ளார். எதிரணியினரின் ஏமாற்று பசப்பு வார்த்தைகளை முஸ்லிம்கள் நம்பி ஏமாந்து விடக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முழுநாட்டு மக்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் இருக்கும் போது ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் துரோகமிழைத்த மைத்திரி அல்ல, எவர் அபேட்சகரானாலும் எமது ஜனாதிபதியே…

Read More

அரபு எமிரேட்சில் விசா மூலம் தங்கியுள்ள அரபு அல்லாத அயல் நாட்டினருக்கு வீடுகள்

தி. ரஹ்மத்துல்லா அரபு எமிரேட்சில் விசா மூலம் தங்கியுள்ள அரபு அல்லாத அயல் நாட்டினர், 100 வருட ஒப்பந்தத்தில் ஷார்ஜாவில் வீட்டு மனைகள் வாங்கலாம். வீட்டு மனைகளில் முதலீட்டை அயல் நாட்டினருக்கு ஷார்ஜா முதன் முதலாக அனுமதித்துள்ளது. ஷார்ஜாவில் டைடல் சிடியில் 7,500 சதுர அடி பரப்ரளவு உள்ள மனைகள், ஒரு சதுர அடி 110திர்ஹம் முதல் 303 திர்ஹம் வரை கிடைக்கும். ( ஒரு சதுர அடி சுமார் 3690  ரூபாய் முதல் 10 000 ரூபாய்…

Read More

எகிப்து அஸ்ஹர் பல்கலைக்கு அமைச்சர் ரிசாத் விஜயம்இலங்கை மாணவர் ஒன்றியத்திற்கு உதவி

-ஏ.எச்.எம்.பூமுதீன்- எதிப்துக்கு விஜயம் செய்துள்ள அ.இம.கா தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் ,உலகில் இஸ்லாமிய கல்விக்கு பிரபல்யம் பெற்ற அல் – அஸ்ஹர்பல்கலைகழகத்திற்கு நேற்று சனிக்கிழமை (22) விஜயம் செய்தார்.அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் இலங்கையிலிருந்து புலமைப்பரிசில் பெற்றுச் னெ;றுள்ள மாணவர்களுடன் அமைச்சர் இதன்போது பல மணிநேரம் கலந்துரையாடினார்.மாணவர்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்த அமைச்சர் ரிசாத் பதியுதீன் இலங்கை மாணவர் ஒன்றிய வங்கிக் கணக்கிற்கு உதவித் தொகை ஒன்றையும் கையளித்தார்.குறித்த உதவித் தொகையை…

Read More