Headlines

பொது கூட்டணியின் பெயர்; அபே ஜாதிக பெரமுண

எதிர் கட்சிகளின் பொது கூட்டணிக்கு அபே ஜாதிக பெரமுண என பெயர் வைக்கப்பட்டுள்ளது. சுமார் பத்து பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்ட போதிலும் அபே ஜாதிக பெரமுண என்ற பெயர் பொருத்தமான இருப்பதாக பொதுக்கூட்டணிகள் முடிவெடுத்துள்ளன. பொது கூட்டணிக்கான சின்னம் தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. தற்போதைக்கு சின்னம் தொடர்பாக கட்சிகளின் பிரதிநிதிகள் இடையே கலந்துரையாடல் நடைபெற்று வருகிறது.

Read More

ரஷ்யா சர்வதேச நாடுகளில் இருந்து மேலும் தனிமைப்படுத்தப்படும் – அமெரிக்கா

உக்ரெயின் விடயத்தில் ரஷ்யா தொடர்ந்தும் குற்றமிழைத்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் உதவி ஜனாதிபதி ஜோ பெய்டன் இதனைத் தெரிவித்துள்ளார். தற்போது உக்ரெயினில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகின்ற நிலையில், ஜோ பெய்டன் அந்த நாட்டுக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கிறார். நேற்று அவர் உக்ரெயின் ஜனாதிபதி பெற்றோ பொறசென்கோவை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது, யுக்ரெயினில் தளம்பலை ஏற்படுத்த ரஷ்யா தொடர்ந்தும் முயற்சிப்பதாக குற்றம் சுமத்தினார். ரஷ்யா தமது போக்கை மாற்றிக் கொள்ள தவறின், சர்வதேச நாடுகளில்…

Read More

எதிரணியின் பொதுவேட்பாளர் இரகசியம் பேண செய்மதி தொலைபேசி, இலக்கத்தகடற்ற வாகனங்கள்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராக்கும் திட்டம் மிக மிக இரகசியமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. அது பற்றிய தகவல்கள் வெளியே கசிந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தரப்பு உஷாரடைந்து விடாமல் இருப்பதற்காக திட்டங்கள் மிகமிக கச்சிதமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த நகர்வு தொடர்பான அனைத்துத் தொடர்புகளுக்கும் செய்மதித் தொலைபேசிகளே பயன்படுத்தப்பட்டுள்ளன. செய்மதித் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்பது கடினமானது என்பதால் அரச புலனாய்வாளர்களை ஏய்ப்பதற்கு இந்த வழிமுறை கையாளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது….

Read More

மூன்றாக உடையும் முஸ்லிம் காங்கிரஸ்! அதிர்ச்சியில் ஹக்கீம்

தற்போதைய நிலையில் அமைச்சர் பஷீர் சேகுதாவூது தலைமையில் கட்சியின் ஒரு குழுவினர் அரசுடன் நேரடியாக ஐக்கியமாகும் முடிவில் உள்ளனர். இன்னொரு குழுவினர் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்கத் தலைப்பட்டுள்ளனர். பைசல் காசிம், அஸ்லம் மற்றும் ஹரீஸ் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் குழுவில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே பொருத்தமான தருணம் வரும்வரை எந்தப்பக்கத்துக்கும் ஆதரவு தெரிவிக்காமல் காலத்தைக் கடத்தும் யுக்தியைக் கையாள கட்சித் தலைவர் ஹக்கீம் முடிவெடுத்துள்ளார். இதற்கு ஆதரவாக செயலாளர் ஹசனலி,…

Read More

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது முடிவை 25ம் திகதி அறிவிப்பாராம்!

இலங்கை ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 2015ம் ஆண்டு தை மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் ஆளும் கட்சியின் அமைச்சர்கள் பலர் பொது எதிரணியின் பக்கம் தாவி வருகின்றனர் இந்நிலையில் உங்கள் நிலைப்பாடு என்ன? என அமைச்சர் டக்ளஸிடம் எழுப்பப்பட்ட கேள்விக் கு எதிர்வரும் 25ம் திகதி என் முடிவை அறிவிப்பேன் என கூறியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தென்னிலங்கையில் தொடர்ச்சியாக கட்சி தாவல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இன்றைய…

Read More

அட்டாளைச்சேனை வீதிகளின் அவல நிலை போக்குவது யாரோ..??

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் அண்மைக் காலமாக தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக அட்டாளைச்சேனை 1 ஆம் பிரிவு,9ஆம் பிரிவு,8ஆம் பிரிவு,15ம் பிரிவு வீதிகளில் மக்கள் பயணிக்க முடியாத நிலை தோன்றியுள்ளது.அன்றாடம் பாட சாலை செல்லும் மாணவர்கள் மிகவும் சிரமப் படுவதாகவும் அறிய முடிகிறது.சில குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயரக் கூடிய நிலைக்கும் தள்ளப் பட்டுள்ளனர்.சிறந்த வாடிகால் அமைப்பு தொழில் நுட்பங்கள் இல்லாமையே இதற்கான பிரதான காரணம் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.பல வருட…

Read More

தனிநபர் நிதியின் கீழ் அல் – மனாரில் திறந்த அரங்கு (photos)

ஏ.எச்.எம். பூமுதீன் மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரியில் ரூபா 45 இலட்சம் செலவில் நிர்மானிக்கப்பட்டு வரும் லயன் சித்திக் நதீர் திறந்த அரங்கானது மருதமுனையில் தனி நபர் ஒருவரின் சொந்த நிதியினால் நிர்மானிக்கப்படும் முதலாவது கட்டடம் என்ற பெருமையை பெற்றுள்ளது. ‘மை ஹோப்’ குழுமம் மற்றும் ஐவா தாதியர் கல்லூரி என்பனவற்றின் தலைவரான சித்திக் நதீரே பிரமாண்ட திறந்த அரங்கிற்கான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார். அல்மனாரில் நிர்மானிக்கப்படும் இந்த திறந்த அரங்கிற்கு மேலதிகமாக அரங்கின் மேற்பகுதியில்…

Read More