Headlines

மைத்திரிபாலவின் வீட்டு பாதுகாப்பும் வாபஸ்

பொலன்னறுவையில் உள்ள முன்னாள் சுகாதார அமைச்சரான மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு பிரிவினர் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக, நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

மைத்திரிபால சிறிசேனாவுக்கு ஹெல உறுமயவும் ஆதரவு

அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஐாதிக ஹெல உறுமயவும் எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கவுள்ளது. அண்மையில் அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஐாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

Read More

மைத்திரியின் பாதுகாப்பு நீக்கம்

முன்னாள் சுகாதார அமைச்சரும் எதிர்கட்சிகளின் ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சர்களுக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடுவதற்காக அவர் நேற்று அமைச்சுப் பதவியில் இருந்து விலகியுள்ளதால் அவருக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சர்களுக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இருப்பினும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படுகின்ற பாதுகாப்பு அவருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.

Read More

தம்மை எதிர்த்த சரத்தின் நிலையே மைத்திரிக்கும் : மகிந்த

தம்மை எதிர்த்து போட்டியிட்ட சரத் பொன்சேகாவுக்கு ஏற்பட்ட நிலைமையே மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஏற்படும் என்று ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இடம்பெற்ற அரச ஆயுர்வேத வைத்தியர்களுக்கான போசனம் வழங்கல் நிகழ்வில் ஜனாதிபதி இந்தக்கருத்தை வெளியிட்டார். ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்ய முடியாத நிலையிலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளரை ஐக்கிய தேசிய கட்சி தெரிவு செய்துள்ளது. இது ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அரசாங்கத்தின் பொது வேட்பாளராக போட்டியிடுவது…

Read More

மைத்திரிபால சிறிசேன பாரிய துரோகம் இழைத்து விட்டாராம் அஸ்வர் MP கண்டுபிடிப்பு

நேற்று வரையில் அமைச்சராக பதவி வகித்த மைத்திரிபால சிறிசேன, குடும்ப அரசியல் பற்றி எவ்வாறு குற்றம் சுமத்த முடியும்? சிறிமாவோ பண்டாரநாயக்க நாட்டை சிறந்த முறையில் ஆட்சி செய்தார். எனினும் அவரது மகள் சந்திரிக்கா, மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து சூழ்ச்சி செய்கின்றார். மக்களுக்கு நலன்களை ஏற்படுத்திய மதத் தலைவர்கள் அரசியல் தலைவர்களுக்கு எதுவும் நடக்காது. மைத்திரிபாலவின் நடவடிக்கை பாரியளவிலான துரோகமாகும். சர்வதேச சூழ்ச்சித் திட்டமொன்று முன்னெடுக்கப்படுவதனை ஜனாதிபதி அம்பலப்படுத்தினார். கடந்த சில தினங்களில் பல மில்லியன் அமெரிக்க…

Read More

மு.கா உறுப்பினர்களை கொழும்புக்கு வருமாறு அழைப்பு

முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ,மாகாண சபை உறுப்பினர்கள் ,உள்ளுராட்சி உறுப்பினர்கள் மற்றும் உயர்பீட உறுப்பினர்களை கொழும்புக்கு வருமாறு கட்சியின் தலைமையால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக முகா உறுப்பினர் பிரமுகர் எம்மிடம் தெரிவித்தார். பம்பலப்பட்டி சிலோன் ஹோட்டலில் நாளை ஞாயிறு (23)அவசர கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பிலும் இங்கு தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Read More

ஸ்ரீ.சு.க.யின் செயலாளராக அநுர பிரியதர்ஷன நியமனம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளராக அநுர பிரியதர்ஷன யாபா நியமிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல் அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More