ஜனாதிபதிக்கு ஆதரவில்லை சனி மாற்றமும் நல்லதுக்கில்லை
ஜனாதிபதித் தேர்தலில் அரச தரப்புக்கு ஆதரவ ளிக்கப்போவதில்லை என்றும், மஹிந்த ராஜபக்வின் கொள்கைகளை தோற்கடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் ஜாதிக ஹெல உறுமயவின் தவிசாளர் அத்துரெலிய ரத்தன தேரர் கூறினார். தேசிய நூலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற செய்தி யாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறினார். “அமைச்சுப் பதவிகளைத் துறந்து அரசுக்கு தெளிவானதொரு பதில் வழங்கப்பட்டுள்ளது. எனவே, நாட்டில் அரசமைப்பு மாற்றப்பட வேண்டும். நிறைவேற்று ஜனாதி பதி முறைமையில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்….
