Headlines

கைத்தொழில் அபிவிருத்தி மாநாடு

ஊடகப் பிரிவு ஐக்கிய நாடுகள் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பு ஏற்பாடு செய்த கைத்தொழில் அபிவிருத்தி மாநாட்டில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத்  பதியுதீன் மற்றும் ஐக்கிய நாடுகள் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பின் பணிப்பாளர் நாயகநாயகம் லி-யோங் ஆகியோர்  சந்தித்து கைகுலுக்குவதை படத்தில் காணலாம். (NOV 5)

Read More

அ.இ.ம.கா. கிளை பிரான்சில் உதயம்

ஏ.எச்.எம் பூமுதீன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – சர்வதேச ரீதியாக கிளைகளை அங்குரார்ப்பணம் செய்யும் வேலைத்திட்டத்தில் 02ம் கட்ட நிகழ்வு நேற்று முன்தினம் 06ம் திகதி பிரான்ஸில் இடம்பெற்றது. ஐரோப்பிய நாடொன்றான பிரான்ஸில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்ட முதலாவது அ.இ.ம.கா கட்சியின் கிளை இதுவாகும். இலங்கையின் தேசிய முதுபெரும் கட்சிகளான சு.கட்சி. மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பனவற்றுக்கு அடுத்ததாக ஐரோப்பிய நாடான பிரான்ஸி;ல் கட்சிக் கிளை ஒன்றை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் பெருமையை இதன் மூலம்…

Read More

கருத்துச் சுதந்திரத்தை ஒழிப்பதற்கே உயர்நீதிமன்றை நாடினார் மஹிந்த

பதவிக்காலம் முடிவடைவதற்கு இன்னும் இரண்டு வருடங்கள் உள்ள நிலையில், ஜனா திபதித் தேர்தலில் போட்டியிடு வது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ­ ஏன் உயர் நீதிமன்றத்திடம் அவசரமாக விளக்கம் கோரியுள்ளார் எனக் கேள்வி எழுப்பிய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், ஏனையோரின் கருத்துச் சுதந்திரத்தை இல்லாதொழிக்கும் வகையிலேயே இந்தச் செயல் அமைந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ­ உயர் நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியுள்ளதன் அவசரத்தையும் – அவசியத்தையும் தம்மால்…

Read More

ISIS களுடன் இணைய முற்பட்ட மூவர் இலங்கையில் கைது!

சிரியாவின் போராளிக் குழுக்களுடன் இணைந்து கொள்ளும் நோக்கில் வந்த  மூன்று மாலைதீவுப் பிரஜைகள் இலங்கையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 23 மற்றும் 25 வயதான இரண்டு ஆண்களும் 18 வயதான பெண்ணுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு மாலைதீவுக்கே நாடு கடத்தப்பட்டுள்ளதாக மாலைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மூவரும் துருக்கியின் ஊடாக சிரியாவுக்குள் பிரவேசிக்க திட்டமிட்டதோடு மருத்துவ வியடம் தொடர்பில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும் அவர்கள் இலங்கைக்குள் பிரவேசிக்கும் போது ஒருவழி விமான அனுமதிச் சீட்டுக்களையே கொண்டிருந்ததாக…

Read More

மஹிந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை இழந்துள்ளார்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை மஹிந்த ராஜபக்ஷ இழந்துள்ளார் என ஜே.வி.பி.யின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையாகப் போட்டியிட முடியுமா என்பது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, உயர்நீதிமன்றத்திடம் கோரியுள்ளார். இப்படி கோருவதற்கு, அரசியலமைப்பில் இடமில்லை. ‘மற்றுமொரு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை மஹிந்த ராஜபக்ஷ இழந்துள்ளார். இதுவொரு தனிப்பட்ட  பிரச்சினையாகும். அரசியலமைப்பின் 18ஆவது திருத்தத்துக்கு அமையவேனும் மீண்டும் அவர் போட்டியிட முடியாது. இதனால், இதுவொரு பொதுப்…

Read More

கவர்ச்சியான கண்களை வெளியில் காட்ட தடை – சவுதி அரேபியா

கவர்ச்சியான கண்கள் உள்ள பெண்கள் கண்களை வெளியில் காட்ட தடை விதித்து சவுதி அரேபியாவில் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின்படி கவர்ச்சியான கண்கள் உள்ள பெண்கள் அதை மறைக்கும் வகையில் பர்தா அணிய வேண்டும். இது குறித்து சவுதி அரசின் நல்லொழுக்க மேம்பாடு மற்றும் தீயவை தடுப்பு குழுவின் செய்தித் தொடர்பாளர் ஷஏக் மோத்லப் அல் நபத் கூறுகையில் :- கண்களை மறைக்குமாறு அதிலும் கவர்ந்திழுக்கும் கண்களை மறைக்குமாறு குழு உறுப்பினர்கள் பெண்களிடம் தெரிவிப்பார்கள்….

Read More

இலங்கை அடையாள அட்டைக்கு வெளிநாடுகளில் தடை?

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்பவர்கள் தேசிய அடையாள அட்டையை கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் ஆர்.எம்.எஸ்.சரத் குமார தெரிவித்துள்ளார். தேசிய அடையாள அட்டையில் விபரங்கள் சிங்களம் மற்றும் தமிழில் மாத்திரமே காணப்படுவதால் அதனை வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்ல வேண்டிய தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே வெளிநாடுகளுக்கு நீண்ட காலப் பயணங்களை மேற்கொள்பவர்கள் அடையாள அட்டைகளை கொண்டு செல்வது தொடர்பாக கடுமையான நடைமுறைகளை பின்பற்றவுள்ளதுடன் வெளிநாடுகளிலுள்ள தூதரகங்களுக்கு இது குறித்து அறிவுறுத்தவுள்ளதாகவும் அவர்…

Read More

மஹிந்தவின் ஆட்சிக்கு அத்துரலியே ரத்ன தேரர் அதிருப்தி!

தேர்தலில் மகிந்தவின் ஜாதகத்தை விட மக்களின் ஜாதகம் பலமானது எனவும் ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ஷவின் ஜாதகத்தை பலப்படுத்தும் அளவுக்கு நாட்டு மக்கள் துரதிஷ்டசாலிகள் இல்லை. தற்போது எமக்கு பாரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கட்சிகளின் நிலைப்பாடுகளுக்கு வரையறைப்படாது, அதில் இருந்து தூரச் சென்று அந்த சிறைகளில் இருந்து விலகி, மக்களுக்காக முன்னோக்கி செல்லும் யுகம் உருவாகியுள்ளது. தேசிய பொருளாதாரத்தை வளர்க்க உருவாக்கப்பட்ட மகிந்த சிந்தனை இன்று அதனை…

Read More

துருக்கி பள்ளிகளில் குர்ஆன் அடிப்படை பாடம்

கான் பாகவி துருக்கி பெயரளவில் முஸ்லிம் நாடு. ஆனால், இஸ்லாம் அரசாங்கத்தில் இல்லை. அண்மைக் காலமாக மாற்றங்கள் தெரிகின்றன. துருக்கி பள்ளிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு இப்போது அனுமதிக்கப்படுகிறது. அவ்வாறே பள்ளிகளில் திருக்குர்ஆன் கற்பிக்கப்படும் என்ற முடிவையும் அரசு எடுத்துள்ளது. திருக்குர்ஆனைக் கற்கவும் விளங்கவும் ஏதுவாக அரபிமொழி இரண்டாம் மொழியாகக் கற்பிக்கப்படும். இதன் மூலம் பல்கலைக் கல்வி எளிதாகும்; அடுத்த தலைமுறை அரசியல் மாற்றங்களையும் இறைவேதத்தின் சரியான விளக்கத்தையும் புரிந்துகொள்ள இயலும். இப்போது பதவிக்கு வந்துள்ள துருக்கி…

Read More

இதுவரை தேசிய அடையாள அட்டை பெறாத மாணவர்கள் ….

இதுவரை தேசிய அடையாள அட்டை பெறாத மாணவர்கள் எதிர்வரும் இரண்டு வாரங்களில் அதனைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்னும் 50,000 மாணவர்கள் தேசிய அடையாள அட்டை பெற வேண்டியுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மூவாயிரம் விண்ணப்பதாரிகளின் விண்ணப்பத்தில் பிழைகள் இருப்பதால் அவற்றை திருப்பி அனுப்பியுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் கூறியுள்ளது. மேலும் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத பாடசாலைகளும் இருப்பதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Read More

மகிந்தவின் முட்டாள்தானமான வேலை – ரணில் கேலி

மூன்றாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வழக்கொன்றை தாக்கல் செய்யாது, உயர்நீதிமன்றத்தில் ஆலோசனை தீர்ப்பை கோரியிருப்பது பெரிய முட்டாள்தனம் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தான் மகிந்த ராஜபக்ஷ இடத்தில் இருந்திருந்தால் அப்படியான கேள்வியை கேட்டிருக்க போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார். 78 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்ட 18வது திருத்தச் சட்டத்திற்கு அமைய மூன்றாவது முறையாக தேர்தலில் போட்டியிட தடையிருக்கின்றதா என ஜனாதிபதி உயர்…

Read More

அக்ஸா பள்ளிவாசலுக்கு அருகில் கதிகலங்கும் இஸ்ரேல்

அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தில் இடம்பெற்ற மோதலை அடுத்து nஜரூசலம் நகரில் பலஸ்தீனர் ஒருவர் காரை மோதவிட்டு நடத்திய இரண்டாவது தாக்குதலில் மூன்று இஸ்ரேல் படையினர் காயமடைந்துள்ளனர். இதில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக இஸ்ரேல் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பலஸ்தீன இலக்க பலகையுடன் மிகப்பெரிய வர்த்தக வாகனம் ஒன்றே மோதிக்கொண்டு தப்பிச் சென்றதாக இஸ்ரேல் பொலிஸ் பேச்சாளர் லூபா சமரி குறிப்பிட்டுள்ளார். கடந்த புதன்கிழமை nஜரூசலத்தில் வாகனத்தை மோதவிட்டு நடத்தப்பட்ட பிறிதொரு தாக்குதலில் இஸ்ரேல் எல்லைப் பொலிஸார்…

Read More