Headlines

அல்-கிம்மா நிறுவனம் உதவி பதுளையில் மன்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணபணி

எம்.ரீ.எம்.பாரிஸ் மட்டக்களப்பு கல்குடா அல்-கிம்மா நிறுவனம் பதுளை மாவட்டத்தின் கொஸ்லந்தையில் இயற்கை அணர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொண்டது. அதன் முதற்கட்டமாக பாதிக்கப்பட்டு பல்வேறு இன்னல்;களையும் துன்பங்களையும் அனுபவித்து வரும் பதுளை மாவட்ட மக்களை நேரில் கண்டு அவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காகவும்,அம்மக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை வழங்குவதற்காவும் அல்-கிம்மா நிறுவனம் நேற்று காலை 6.00மணிக்கு பதுளை நோக்கி பயணித்தது. இனஐக்கியத்தையும்  சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் மேம்படுத்தும் நோக்கில் இம் மனித நேயப்பணிகள்  நிறுவனத்தினால்  முன்னொடுக்கப்பட்டது. நிறுவனத்தின்…

Read More

தர்கா நகர் பதட்ட நிலை.. தற்போதைய நிலைமையின் அப்டேட்.

தர்கா நகர் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற சம்பவம் ஒன்றினால் சிறு பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவித்தன. தர்கா நகர் பத்திராஜாகொட பகுதியின் ஊடாக உதைபந்தாட்டம் விளையாடி விட்டு சென்றுகொண்டிருந்த முஸ்லிம் வாலிபர்களுக்கும் சிங்கள வாலிபர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை கைகலப்பில் முடிந்துள்ளது. அப்பிரதேசத்தில் இருந்த முஸ்லிம் வீடு ஒன்றில் இருந்த முஸ்லிம் பெண் ஒருவரும் தாக்கப்பட்டுள்ளார் அதுதவிர அப்பிரதேச விகாரை மணி தொடர்ச்சியாக அடிக்கப்பட்டதாகவும் அப்பகுதி மின்சாரம் தடைப்படதாகவும் அங்கிருந்து…

Read More

பாலஸ்தீனத்தை தனிநாடாக சுவீடன் அங்கீகரித்தது: இஸ்ரேல் எதிர்ப்பு

பாலஸ்தீனத்தை தனிநாடு ஆக சுவீடன் அங்கீகரித்துள்ளது. அதற்கு அண்டை நாடான இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருந்தாலும், மேற்கு ஐரோப்பா, மத்திய தரைக்கடல் பகுதியை சேர்ந்த ஐரோப்பிய யூனியன் நாடுகள் பாலஸ்தீனத்தை ஏற்கனவே தனிநாடு ஆக அங்கீகரித்துள்ளன. பல்கேரியா, சைப்ரஸ், செக்குடியரசு, ஹங்கேரி, மால்டா, போலந்து, ருமேனியா நாடுகளும், ஐரோப்பிய உறுப்பு நாடுகளும் அல்லாத ஐஸ்லாந்தும் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன. அதைத் தொடர்ந்து தற்போது சுவீடனும் பாலஸ்தீனத்தை தனிநாடு ஆக அங்கீகரித்துள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை சுவீடன் வெளியுறவுத்துறை…

Read More

மகளை கர்ப்பிணியாக்கிய சித்தப்பா

16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில், சிறுமியின் சித்தப்பா கைதுசெய்யப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். பிரதேசமக்கள் கொடுத்த முறைப்பாட்டினையடுத்து லிந்துலை கூமூட் பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார். குறித்த சிறுமியின் தாய் வெளிநாட்டில் பணி புரிவதாகவும் தந்தை வியாபாரி எனவும், இதனால் சிறுமி தனது சித்தப்பா வீட்டில் வசித்து வந்துள்ளார். மேற்படி சிறுமி தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருப்பதாக பரிசோதனைகளின் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் சிறுமி பொலிஸாரின் உத்திரவின் படி…

Read More

எதுவித நிபந்தனைகளுமின்றி அரசுக்கு முழு, ஆதரவு வழங்க முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம்

ஏ.எச்.சித்தீக் காரியப்பர் அடுத்த வருட (2014) வரவு- செலவுத் திட்டத்துக்கான வாக்களிப்பின் போது எவ்வித நிபந்தனைகளையும் முன்வைக்காது அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதென இன்றிரவு (31-10-2014) கூடிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல்பீட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடி, கருத்தறிந்தே தீர்மானம் மேற்கொள்வதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான பஷீர் ஷேகு தாவுத் கலந்து கொண்டிருப்பது விசேட அம்சமாகும்.

Read More

அமைச்சர் மேர்வின் சில்வாவிவன் மகனுக்கு செம அடி

அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகனான மாலக்க சில்வா தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொள்ளுப்பிட்டி, டுப்பிளிகேஷன் வீதியிலுள்ள இரவு விடுதியில் இன்று சனிக்கிழமை(01) அதிகாலை 3 மணியளவில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மெற்கொண்டு வருகின்றனர். Tm

Read More

இரண்டு பிரதான கட்சிகள் மட்டுமே நாட்டை ஆட்சி செய்ய முடியும் என்ற கலாச்சாரத்தை மாற்றியமைக்க வேண்டும் – முன்னணி சோசலிச கட்சி

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்த முன்னணி சோசலிச கட்சி தீர்மானித்துள்ளது. ஏனைய இடதுசாரி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய சோசலிச கட்சி, மாவோவத கம்யூனிஸ்ட் கட்சி, பராக்ஸிக்ஸ் கூட்டமைப்பு உள்ளிட்ட தரப்பினருடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது குறித்து இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இரண்டு பிரதான கட்சிகள் மட்டுமே நாட்டை ஆட்சி செய்ய முடியும் என்ற கலாச்சாரத்தை மாற்றியமைக்க வேண்டுமென முன்னணி சோசலிச கட்சியின்…

Read More

ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கே ஆதரவு: ஈ.பி.டி.பி

யுத்தத்திற்கு முடிவு கண்டதைப்போல், தமிழ் பேசும் மக்களின் நாளாந்த பிரச்சினைக்கு தீர்வைக்காண வழியை ஏற்படுத்தியதுபோல், தமிழ் பேசும் மக்களின் அரசியல் பிரச்சினைக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே தீர்வைக்காண வேண்டும். தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கே ஈ.பி.டி.பி ஆதரவு. எமது மக்களின் சார்பாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி முன்வைத்திருக்கும் கோரிக்கைகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் நிறைவேற்றித் தருவார் என்ற நம்பிக்கையுடன், நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கே ஆதரவு வழங்குவதென ஈ.பி.டி.பி. முடிவு…

Read More

220 தமிழ் முஸ்லிம் இளைஞர்களுக்கு சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வு (படங்கள் இணைப்பு)

எ.எச்.எம்.பூமுதீன் மன்னார் மாவட்டத்தில் சாரதி பயிற்சியை நிறைவு செய்த 220 தமிழ் முஸ்லிம் இளைஞர்களுக்கு சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வு நேற்று (31) நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட கைத்தொழில் மற்றும் வனிக அமைச்சர் ரிசாத் பதியுதீன் சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கி வைத்தார். இந்நிகழ்வுக்கு வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், முத்து முகம்மட், அப்துல் பாரி என பலர் கலந்துகொண்டனர். ஒவ்வொரு வருடமும் அமைச்சரால் இலவசமாக சாரதி பயிற்சி வழங்கி இளைஞர்…

Read More

அ.இ.ம.காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம்

ஊடகப் பிரிவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அவசர அதியுயர் பீட கூட்டம் எதிர்வரும் 08 ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது. கட்சியின் தேசியத்தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் தலைமையில் இடம்பெறவுள்ள இக்கூட்டத்திற்கு உயர்பீட உறுப்பினர்களை கலந்துகொள்ளுமாறு கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ் ஹமீட் அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் பட்சத்தில் வேட்பாளராக களம் இறங்குவோரில் யாரை ஆதரிப்பது அவ்வாறு ஆதரவு வழங்க முடிவெடுக்கப்படும் நபரிடம் முஸ்லிம் சமுகம் நலன் சார்ந்த எவ்வாறான விடயங்களை முன்வைப்பது,…

Read More