Headlines

தொழிலுக்காக சவுதி அரேபியா செல்பவர்களுக்கு புதிய நடைமுறை

தொழில் நிமித்தம் சவுதி செல்லும் பணியாளர்களுக்கு புதிய நடைமுறை தொழில்வாய்ப்புக்காக பணியாளர்களுக்கு வீசா வழங்கும் முறையில் திருத்தம் மேற்கொள்வதற்கு சவுதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தொழில்வாய்ப்பிற்கு பணியாளர்களை இணைத்துக்கொள்வதற்கு தொழில்  வழங்குனர்களின் செலவை குறைத்துக்கொள்வதும், பணியாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதும் இந்த நடவடிக்கைக்கான காரணமென அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கமைய, பணியாளர்களை இணைத்துக்கொள்வதற்கு ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறைமை அந்நாட்டு தொழிற்துறை அமைச்சருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த முறைமையின் ஊடாக பணியாளர் ஒருவரை அமர்த்துவதற்கு சவுதி குடும்பமொன்று செலவிடும்…

Read More

மரணத்தை சுவாசித்தவள், தனது தாய்க்கு எழுதிய மனதை உருக்கும் கடிதம்…!

ஜெனி டொலி (JENYDOLLY) தன்னை பலாத்காரம் செய்ய வந்த காவல்துறை அதிகாரியை கொலை செய்ததாக இந்த பெண் கூறியிருந்தார். அந்தக் குற்றத்திற்காக அவருக்கு மரண தண்டனை நிறைவேற்ற நீதிமன்றம் முடிவு செய்து, சனிக்கிழமையன்று நிறைவேற்றவும் செய்தது. அதற்கு முன் அவர் தன் அம்மாவிற்கு எழுதிய கடிதத்தின் மொழிபெயர்ப்பு. அன்புள்ள ஷோலே, கிசாசை (இரானிய தண்டனைச் சட்டம்) நான் சந்திக்க வேண்டிய நாள் இது தான் என்று இப்போது தான் அறிந்து கொண்டேன். என் வாழ்க்கைப் புத்தகத்தின் கடைசி…

Read More

அரசாங்கத்திலிருந்து வெளியேறுவது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை – அத்துரலிய தேரா்

ஜாதிஹ ஹெல உறுமய அரசாங்கத்திலிருந்து வெளியேறுவது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்த பின்னர் அதன் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய தேரர் தெரிவித்துள்ளார்.  நேற்று ஜனாதிபதியுடன் விசெட சந்திப்பொன்றை மேற்கொண்ட பின்னரே அவர் இதனை தெரிவித்துள்ளார். அரசாங்கம் நாங்கள் ஆட்சியில் இணைந்திருக்கவேண்டுமென்றே விரும்புகிறது. அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டி அதன் தவறுகளை சரிசெய்வதே எமது நோக்கம். நாங்கள் அதனுடன் மோதலில் ஈடுபடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்திற்க்கு எங்கள் யோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்கான காலம் உள்ளது,அரசாங்கம்…

Read More

சிங்கள ராவய பிளவுபட்டது..!

இலங்கையின் முன்னணி பௌத்த இனவாத அமைப்புகளில் ஒன்றான சிங்கள ராவய அமைப்பு இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. அதன் முக்கிய உறுப்பினர்களான தேசிய அமைப்பாளர் யக்கலமுல்லே பவர, உபதலைவர் புலியத்தே சுதம்ம ஆகிய தேரர்கள் தங்களது பொறுப்புகளிலிருந்து ராஜினாமாச் செய்துள்ளனர். மேலும் அமைப்பை விட்டு தனித்து இயங்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர். அமைப்பின் பொதுச் செயலாளராக உள்ள மடிகல்லே பஞ்ஞாசீஹ தேரரும் விரைவில் அமைப்பின் பொறுப்பிலிருந்து விலகவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மைச்சர் தினேஷ் குணவர்த்தனவின் ஏற்பாட்டில் அக்மீமன தயாரத்தின தேரரை தலைவராகக்…

Read More

60 இலட்சம் வாக்குகளுக்காக, ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் படையணி இன்று ஆரம்பிக்கப்படுகிறது

ஐக்கிய தேசிய கட்சியினால் 4 இலட்சத்து 25 ஆயிரம் வாக்களிப்பு நிலைய அமைப்பாளர்களை கொண்ட தேர்தல் படையணியொன்று இன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது. இதற்கமைய ஐ.தே.க. வின் நாடளாவிய ரீதியிலுள்ள 12000 வாக்களிப்பு நிலைய அமைப்பாளர் இன்று கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் ஒன்று கூடவுள்ளதாக ஐ.தே.க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க  தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தகவலளிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்களிப்பு நிலைய அமைப்பாளர்கள் மாநாடு இன்று 3 மணிக்கு கட்சியின் தேசிய தலைவர்…

Read More

முஸ்லிம்களின் தேசியத் தலைமையை அழிக்க சதி –முசலி பிரதி தவிசாளர் பைறுஸ்

ஏ.எச்.எம். பூமுதீன் முஸ்லிம் தேசியத் தலைமை ஒன்று வடக்கிலிருந்து பரினமிப்பதற்கு பிரபாகரனும் மதவாதிகளும் இனவாதிகளும் அன்று முதல் செய்து வரும் சதியை – அவர்களின் வலையில் சிக்கிக் கொண்ட ஒரு குழு இன்று பிரதேசவாதம் என்ற போர்வையில் அச்சதியை அரங்கேற்ற முனைவதாக கடும் தொனியில் எச்சரித்துள்ளார் அ.இ.ம.கா முசலி பிதேச சபையின் பிரதி தவிசாளர் பைறுஸ் சதிகாரர்களுக்கெல்லாம் சதிகாரன் இறைவன் என்பதை அச்சதிகாரர்களுக்கு ஞாபகம் ஊட்டும் அதே நேரம் இச்சதியை முறியடித்து – வடக்கு முஸ்லிம்களை பாதுகாக்க…

Read More

கால் நூற்றாண்டுக்கு காலடி வைத்துள்ள வட முஸ்லிம்களது வெளியேற்றம்

பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாக முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தில் குடியேறி தலைமுறை தலைமுறையாக பேரோடும் புகழோடும் வாழ்ந்து வந்தார்கள். முன்னொருகால் கோட்டை பிரதேசத்திலும் நல்லூர் பகுதியிலும் குடியிருந்ததும் அங்கிருந்து பலவந்தம் காரணமாக யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளுக்கும் இடம்பெயர்ந்து சென்றதும், இறுதியாக சோனக தெரு எனப்படும் பிரதேசத்தில் பல நூற்றாண்டு காலமாக நிலைகொண்டு வாழ்ந்து வந்ததும் வரலாறு. வடக்கே ஓட்டுமடம், தெற்கே கொட்டடி, கிழக்கே வண்ணார்பண்ணை, மேற்கே நாவாந்துறை என்னும் பகுதிகளால் சூழப்பட்டு யாழ்.மாநகர சபையின் 19ஆம், 21ஆம் வட்டாரங்களை முழுமையாகவும்,…

Read More

மட்டக்களப்பு றோஸ் முன்பள்ளியின் 20வது மாணவர் வெளியேற்று விழா

எம்.ரீ.எம்.பாரிஸ் மட்டக்களப்பு செம்மண்ணோடை றோஸ் முன்பள்ளியின் 20வது மாணவர் வெளியேற்று விழாவும் பரிசளிப்பு வைபவமும் நேற்று (26) ஞாயிற்றுக்கிழமை சாட்டோ விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது. செம்மண்ணோடை கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஏ.எல்.ஏ கபூர் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வின் பிரதம அதிதியாக அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.எம்.எஸ் ஹாரூன்(ஸஹ்வி)அதன் செயலாளர் ஐ.எம்.றிஸ்வின் கிராம சேவையாளர் எம்.எம்.சாதாத் பாரி ஜூம்ஆப்பள்ளிவாயல் தலைவர் ஏ.மிராசாய்வு (ஹாஜி)சட்டோ விளையாட்டு கழக தலைவர் வை.எல்.மன்சூர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை …

Read More

போட்டோ கொப்பி இயந்திரம் வழங்கும் நிகழ்வு

எம்.ரீ.எம்.பாரிஸ் போட்டோ பிரதி இயந்திரம் கையளிக்கும் நிகழ்வும் தரம்5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் வைபவம் மட்டக்களப்பு மாஞ்சோலை அல்-ஹிரா வித்தியாலயத்தில் இடம் பெற்றது. பாடசாலையின் அதிபர் எம்.ஏ.சீ.ஜிப்ரி கரீம் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி,கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை பிரதி தவிசாளர் ஏ.எம்.நௌபர்,கோட்ட கல்வி அதிகாரி ஏ.எல்.மீராசாகிபு உள்ளீட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர். இதன் போது கிழக்கு…

Read More