Headlines

எபோலா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ. 600 கோடி: மைக்ரோஸாஃப்ட் துணை நிறுவனர் உதவி

எபோலா நோய் பரவல் தடுப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கு 100 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 600 கோடி) அளிப்பதாக மைக்ரோஸாஃப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனர் பால் ஆலன் தெரிவித்தார். இது தொடர்பாக ஏற்கெனவே அவர் 15 மில்லியன் (சுமார் ரூ. 90 கோடி) அளித்துள்ள நிலையில், கூடுதலாக உதவித் தொகையை அறிவித்துள்ளார். இப்போது அறிவித்துள்ள தொகையைத் தவிர, எபோலா நோய் சிகிச்சையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உதவும் விதத்தில், உலக சுகாதார அமைப்புக்கு நிதி உதவி அளிப்பதாக, அவர் வாஷிங்டனில்…

Read More

இலஞ்சம் பெற்ற இரு பொலிஸார் பணி நீக்கம்!

மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரிடம் இலஞ்சம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் இருவர் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையம் தெரிவித்துள்ளது. களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் வைத்து தனது மோட்டார் சைக்கிளில் சிறு தவறு ஒன்றிருப்பதாகக் கூறி கடமையிலிருந்த குறித்த பொலிஸார் இருவரும் 300 ரூபாய் இலஞ்சம் பெற்றதாக வாழைச்சேனையைச் சேர்ந்த ஆர். ஜெயராஜ் என்பவர் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த முறைப்பாட்டை விசாரணை செய்த களுவாஞ்சிக்குடிப் பொலிஸார் கடந்த…

Read More

கமலேஷ் ஷர்மா இன்று இலங்கை விஜயம்

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மா இன்று இலங்கைக்கு வருகைதந்துள்ளார். 2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் முன்னேற்றம் தொடர்பில் ஆராய்வதே கமலேஷ் ஷர்மாவின் இலங்கை விஜயத்திற்கான நோக்கமாக அமைந்துள்ளது. அவர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் சிலரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மா யாழ்ப்பாணத்திற்கும்…

Read More

விளையாட்டு அமைச்சின் புதிய செயலாளராக நந்த மல்வாராச்சி!

ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் நந்த மல்வாராச்சி விளையாட்டு அமைச்சின் புதிய செயலாளராக நேற்று (24) நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முதல் இவர் சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளராக கடமை புரிந்தவராவார். இத்துறையானது 2013 ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் உருவாக்கப்பட்டது. இதற்கென கடந்த செவ்வாய் (21) முன்னைய ஐ.ஜி.பி மகிந்த பாலசூரிய நியமிக்கப்பட்டார். விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கம மற்றும் விளையாட்டு அமைச்சின் சிரேட்ட அலுவலர்கள் எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Read More

கணவன் இறந்த அதிர்ச்சியில் இறந்த மனைவி

கணவன் இறந்ததைப் பார்த்த உடனே மனைவியும் அதிர்ச்சியில் இறந்து போன துயரச் சம்பவமொன்று மட்டக்களப்பு கல்லடி உப்போடையில் இடம்பெற்றுள்ளது. எட்டுப் பிள்ளைகளின் பெற்றோரான கணவர் பூபாலபிள்ளை கனகரெத்தினம் (வயது 77), மனைவி கனகரெத்தினம் இராசம்மா (வயது 70) ஆகிய தம்பதியரே ஒரேநாளில் இறந்துள்ளனர். இந்த துயரமான சம்பவம் வியாழக்கிழமை இடம்பெற்றது இருவரினதும் நல்லடக்கம் உப்போடை மயானத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.  இவ்விரு சடலங்களும் ஒரே புதைகுழியில் அருகருகே புதைக்கப்பட்டன. zn

Read More

சட்டத்தை மதிக்காத மகிந்த?

மகிந்த சட்டத்திற்கு அமைய செயற்படும் நபர் அல்ல என நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். மகிந்த தேர்தலில் போட்டியிட முடியாது என எந்த வாதங்களை முன்வைத்தாலும் எந்த சட்டங்களை கொண்டு வந்தாலும் அவை செல்லுபடியாகாது. மகிந்த ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவார். மகிந்த சட்டத்திற்கு அமைய செயற்படும் நபர் அல்ல என்பதே இதற்கு காரணம். நாம் இப்படியான பாசிசவாத சக்திகளை எதிர்க்க வேண்டும். இதனால் விமர்சன ரீதியான ஆதரவை…

Read More

அமெரிக்க தம்பதிகளிற்கு 2340 வருடங்கள் சிறை

சிறுவர் மற்றும் சிறுமிகளை வைத்து ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளி எடுத்த குற்றம் நிரூபிக்கப்பட்ட அமெரிக்க தம்பதிகளிற்கு அமெரிக்க நீதிமன்றம் 1500 வருடங்களுக்கும் மேல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சமீப காலத்தில் வழங்கப்பட்ட மிக அதிக வருடங்கள் கொண்ட சிறைத்தண்டனை தீர்ப்பு என்று இந்த வழக்கின் தீர்ப்பு கூறப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள Lauderdale County என்ற பகுதியை சேர்ந்த Patricia Ayers என்ற பெண்ணும், அவருடைய கணவர் Matthew Ayers என்பவரும் சேர்ந்து சிறுவர், சிறுமிகளை ஆபாச…

Read More

மனித உரிமை ஆணைக்குழு செல்லும் பல்கலைக்கழக மாணவர்கள்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாருக்கு எதிராக  மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய தீர்மானித்துள்ளதாக சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ரசிந்து ஜயசிங்க தெரிவித்துள்ளார். நீதிமன்ற உத்தரவை தவறாகப் பயன்படுத்தி பொலிஸார்  தங்களின் சத்தியாக்கிரக கூடாரம் அகற்றியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனித உரிமைகள் ஆணைக்குழு செல்ல இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நீதிமன்ற உத்தரவிற்கு முரணாக பொலிஸார் செயற்பட்டிருப்பின் அது குறித்து மாணவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலோ அல்லது நீதிமன்றத்தை நாட முடியும் என…

Read More

ஜனாதிபதித் தேர்தல் தற்போது நடத்த வேண்டாம்- ரில்வின் சில்வா

ஜனாதிபதித் தேர்தல் தற்போது நடத்த வேண்டாம் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக் காலம் முழுமை பெறாததற்கு முன்பதாக 4 வருட பூர்த்தியின் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட முடியாது அது அரசியலமைப்பை மீறும் செயலாகும். ஜே.வி.பி. ஜனாதிபதி தேர்தலை அறிவிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணையாளருக்கே உள்ளது. நாட்டில் இன்று அவ்வதிகாரம் மீறப்பட்டுள்ளது. அவசரமாக அதாவது தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் 4 வருடம் பூர்த்தியானதுடன்…

Read More

ஜனாதிபதி மஹிந்தவை பச்சை பச்சையாக திட்டும் பௌத்த தேரர் (வீடியோ)

கொழும்பிலிருந்து வருகை தந்த மின்சார புலனாய்வு பிரிவின் உத்தியோகத்தர் மட்டக்களப்பு நகரிலுள்ள பௌத்த விகாரையில் மின்சார பாவனையை பார்வையிட சென்ற போது அங்குள்ள பிக்கு இவரை தாக்கியுள்ளார். இச்சம்பவம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. பௌத்த விகாரையில சட்ட விரோதமான முறையில் மின்சாரம் பாவிப்பது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள சென்றபோது விகாரைக்கு பொறுப்பான அம்பேபிட்டிய சுமண ரத்ன தேரரால் தாக்கப்பட்டதோடு, அவதூறான வார்த்தைகளையும் பிரயோகித்துள்ளார். இவர்களோடு சென்ற பொலிஸாருடன் சம்பவத்தினை பார்த்துக் கொண்டு இருந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இது…

Read More

இரகசிய பேச்சுவார்த்தை

ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். ஆளும் கட்சியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ள இணக்கம் வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் நிலைமைகள் குறித்து அமைச்சரவை அமைச்சர்களே திருப்தியின்றி இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஊவா மாகாணசபைத் தேர்தல் முடிவுகளின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியே ஒரே வழி என்பதனை ஆளும் கட்சியினர் புரிந்துகொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சரியான நேரத்தில் ஐக்கிய…

Read More

காலை இழந்த எம்.பி. பாராளுமன்றம் வந்தார்

வாகன விபத்தில் சிக்கி ஒரு காலை இழந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப் பெரும நேற்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்துக்கு வருகை தந்திருந்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன மரணமானதையடுத்து பாராளுமன்றத்தில் ஏற்பட்டிருந்த வெற்றிடத்திற்கு அஜித் மான்னப் பெரும நியமிக்கப்பட்டிருந்தார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வாகன  விபத்தில் சிக்கி ஒரு காலை இழந்ததுடன் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வந்தார்….

Read More