Headlines

பாக். அரசின் நிதிக்கு மேலதிகமாக அமைச்சர் பெசில் ரூ. 130மி ஒதுக்கீடு

ஏ.எச்.எம் .பூமுதீன் வன்னி மக்களுக்கான  வீடமைப்பு திட்டத்துக்கு பாகிஸ்தான் அரசு வழங்கும் 220 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டுக்கு மேலதிகமாக – 130 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்து குறித்த திட்டத்துக்கு உதவியளிக்க அமைச்சர் பசில் ராஜபக்ஷ முன் வந்துள்ளார். இது தொடர்பான அதிகார பூர்வ அறிவித்தலை அமைச்சர் பசில் மன்னார்  புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வைத்து தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அரசின் நிதி  உதவியுடன் நிர்மாணிக்கபடவுள்ள வீடமைப்பு திட்டத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர்…

Read More

ஹிஜாப் அணிந்த காரணத்திற்காக அமெரிக்காவில் தாக்கப்பட்ட பெண் ??

ஹிஜாப் அணிந்த ஒரே காரணத்திற்காக நதீம் மொஹ்சின் என்ற சகோதரி அமெரிக்காவின் புரூக்ளின் பகுதியின் பாரிக்லேஸ் வீதியில் தாக்கப்பட்டுள்ளார்.. இந்த கொடூரத்தை கண்டித்து அமெரிக்காவில் போராட்டாங்களை நடைபெற்றது.. காவல்துறை இந்த குற்றத்தை கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்த்ததாக குற்றம் சாட்டியுள்ளனர்.. நதீம் தாக்கப்பட்ட இடத்தில் தான் இஸ்ரேலிய கால்பந்தாட்ட அணி விளையாடியதும் அந்த நேரத்தில் சியோனிச ஆதரவாளர்கள் இஸ்ரேலுக்கு ஆதரவாக இனவெறியை தூண்டும் பலத்த கோசங்களை எழுப்பியதும் குறிப்பிடத்தக்கது.. அரைகுறை ஆடையுடன் பெண்களை போகப்பொருளாக காட்டுவதை பெண்…

Read More

நாளை 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்

2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதனையொட்டி இன்றும், நாளையும் பாராளுமன்றத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதோடு எம்.பிக்களின் ஓய்வு அறைகள் அலுமாரிகள் என்பனவும் சோதனையிடப்பட இருப்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். நாளை வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 22 வரை பாராளுமன்ற விவாதங்கள் இடம் பெறவுள்ளன. ஒக்டோபர் 25 முதல் நவம்பர் முதலாம் திகதி வரை முதலாம் வாசிப்பு மீதான…

Read More

விட்டுக்கொடுப்புக்கு தயாரில்லை- அத்துரலியே ரத்தன தேரர்

19வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான தமது கட்சியின் கொள்கையை எந்தவிலைக்கும் விற்க தயாரில்லை என ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார் தமது கட்சியின் அரசியல் அமைப்பு திருத்த யோசனை தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாக குறிப்பிட்டார். இதன்போது குழு ஒன்றை நியமித்து அது தொடர்பாக ஆராய்வதாக ஜனாதிபதி உறுதியளித்ததாக தேரர் தெரிவித்தார். அந்தக்குழு தமது பரிந்துரையை ஐந்து நாட்களுக்குள் வழங்கவுள்ளது. எனினும் இதற்கிடையில் இடைக்கால உடன்பாடுகளுக்கு செல்ல தமது கட்சி தயாரில்லை…

Read More

இளம் பெண்ணை கட்டிபிடித்த ஒபாமா : துணிச்சலுடன் எச்சரித்த காதலன்

எனது காதலியை தொடாதே என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை நேருக்கு நேராக இளைஞர் ஒருவர் எச்சரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவது அமெரிக்காவின் சிகாகோ நகரில் மார்டின் லூதர் கிங் சமுதாய மையத்தில் ஆளுநர் தேர்வுக்கான வாக்கெடுப்பு நடைபெற்றுகொண்டிருந்தா போது ஒபாமாவும் அவர் அருகே ஆயியா கூப்பர் என்ற 20 வயது இளம் பெண்ணும் வாக்களித்துக்கொண்டிருந்தனர். இதன் போது சிரித்த முகத்துடன் வாக்களித்துக்கொண்டிருந்த பெண்ணை பார்த்த ஒபாமா ஆர்வமிகுதியில் அப்பெண்ணை கட்டிபிடித்து…

Read More

க.பொ.த சா/த பரீட்சை டிசம்பர் 9 இல்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இந்த வருடம் டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை நடைபெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியூ.எம்.என்.புஷ்பகுமார தெரிவித்துள்ளார். இம்முறை பரீட்சைக்கு 577,084 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர் என்றும் பரீட்சை நேர அட்டவணையில் இனி எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்படாது எனவும்  அவர் மேலும் தெரிவித்தார்.

Read More

சிக்கலில் ஜனாதிபதி!

ஆளும் கட்சியின் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனாவிற்கு பிரதமர் பதவியை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்னதாக பிரதமர் பதவியை மைத்திரிபால சிறிசேனாவிற்கு வழங்குமாறு பொலனறுவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது சிரேஸ்ட அமைச்சர்கள் சிலர் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, திஸ்ஸ கரலியத்த, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். ஜனாதிபதி…

Read More

அதிரடித் தீர்மானம் எடுக்குமா சமசமாஜக் கட்சி?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதா, இல்லையா என்பது தொடர்பில் நாளைய தினம் ஆராயவுள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார முறையை ரத்துச் செய்யுமாறு தனது கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் தொடர்ந்தும் ஜனாதிபதியை வலியுறுத்தி வருகின்ற போதிலும், ஜனாதிபதி அது தொடர்பில் கரிசனை காட்டவில்லை. இந்நிலையில் தொடர்ந்தும் அரசுக்கு ஆதரவளிப்பதற்கும், ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதற்கும் சமசமாஜக் கட்சி சில நிபந்தனைகளை முன்வைக்கும் என்று கூறப்படுகின்றது. 17வது திருத்தச்…

Read More

பரா ஆசிய விளையாட்டுப் போட்டி ; இலங்கைக்கு தங்கம்

பரா ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை  தங்கப் பதக்கத்தைப் பெற்றுள்ளது. ஆடவருக்கான 200 டி-42 மீற்றர் ஓட்டப் போட்டியில் அனில் பிரசன்ன ஜெயலத் குறித்த தூரத்தை 25.87 செக்கன்களில் கடந்து தங்கப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார். இந்தப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை இலங்கையின் சார்பாக உபுல் இந்திக பெற்றுக்கொண்டார்.

Read More

ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கையில் சந்தேகம்- டிலான் பெரெரா

ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் எதிரான தடை நீக்கம் தொடர்பில் தெரிவித்துள்ள கருத்து தமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் டிலான் பெரெரா தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு எடுக்கப்பட்ட முடிவானது ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் சட்டரீதியான தீர்ப்பாகும். இது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளினால் எடுக்கப்பட்ட அரசியல் ரீதியான தீர்மானமல்ல என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சியை பாதுகாப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளதா என்ற சந்தேகமும் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய…

Read More

நிந்தவூரில் ஜனாதிபதி தேர்தலுக்கான அவசர கலந்துரையாடல்

சுலைமான் றாபி ஆட்சி மாற்றம் எனும் அறைகூவலுடன் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை மற்றும் சிரேஷ்ட அரசியல் பிரமுககர்களின் பிரசன்னத்துடன் எதிர்வரும் வருடம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தலுக்கான  அவசர கலந்துரையாடல்  22.10.2014 ஐக்கிய தேசிய கட்சியின் நிந்தவூர் கிளையில் பி.ப 3.00 மணியளவில் இடம்பெற்றது. ஐ.தே.கட்சியின் நிந்தவூர் அமைப்பாளர் எம். றிபாக் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசிம், அனோமா கமகே, மேல்மாகாண சபை உறுப்பினர் முஜிபுர்…

Read More

சிங்கப்பூரிலிருந்து கொழும்பு வந்த விமானத்தில் இலங்கையர் திடீர் மரணம்

சிங்கப்பூரில் இருந்து இலங்கையை நோக்கி வந்து கொண்டிருந்த விமானத்தில் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கையரொருவர், திடீரென அவ்விமானத்தினுள் மரணத்தைத் தழுவிய சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது. பொல்காவலையைச் சேர்ந்த 57 வயது நபரொருவரே இன்று (22) அதிகாலை 1.35 மணியளவில் திடீரென சுகயீனமுற்ற நிலையில் இவ்வாறு  விமானத்தினுள் மரணமாகியுள்ளார். பிரேத பரிசோதனைகள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Read More