Headlines

தீபாவளி பரிசாக தமிழ் மக்களுக் அமைச்சர் ரிசாத் பதியுதீனால் மின்சாரம் வழங்கிவைப்பு

ஏ.எச்.எம் .பூமுதீன் மாந்தை மேற்கு தமிழ் பிரேதச மக்களுக்கு தீபாவளி பரிசாக அமைச்சர் ரிசாத் பதியுதீனினால் புதிய மின்சார இணைப்புக்கள் இன்று (20) வழங்கப்பட்டன. மாந்தை மேற்கு தமிழ் பிரேதசங்களான இலுப்பைக் கடவை  மூன்டாம்பட்டி அந்தோனியார் புரம் ஆகிய கிராமங்களுக்கே மின்சார இணைப்புக்கள் வழங்கப்பட்டன இந்நிகழ்வில் அதிகளவான தமிழ் மக்கள் ஆர்வத்துடன் அமைச்சரை வரவேற்றனர். இங்கு வருகை தமிழ் மக்களுக்கு அமைச்சர் ரிசாத் பதியுதீன் தனது தீபாவளி வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.  

Read More

பொதுபல சேனா தேர்தலில் போட்டி..!

ஜனாதிபதித் தேர்தல் அல்ல பொதுத் தேர்தல் ஒன்றையே தாம் எதிர்பார்த்துக் காத்திருப்பதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். தங்களுக்கு ஜனாதிபதித் தேர்தல் பயனில்லை என்றும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிக்குகள் அல்லாத தலைவர்களை முன்னிறுத்தி போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும் கொழும்பில் இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஞானசார தேரர் குறிப்பிட்டார். பொதுபல சேனா என்ற பெயரில் அல்லது வேறு சிங்கள பௌத்த கட்சி பெயரில் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அவர் கூறினார். தமது அமைப்பினால்…

Read More

ஷரிஆ சட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் கடும் வாக்கு வாதம்

இலங்கையில் ஷரிஆ சட்டம் அமுலில் உள்ளதா? இல்லையா? என்பது தொடர்பில்பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் ஆளுந்தரப்பு எம்.பி. ஏ.எச்.எம். அஸ்வருக்குமிடையே கடும் வாக்குவாதம் நேற்று சபையில் ஏற்பட்டது. பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற காணி (பராதீனப்படுத்தல் மீதான மட்டுப்படுத்தல்கள்) சட்ட மூலம் இரண்டாம் மீதான விவாத்தில்  எம்.பி. ஒருவர் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது இடையிடையே அஸ்வர் எம்.பி. குறுக்கீடு செய்தார். இதன்போது எம்.பி,  கழுத்தை அறுக்கும் கைகளை வெட்டும் ஷரி ஆ சட்டம் இங்கு அமுலில் இல்லை எமது…

Read More

ஜெயலலிதா,இலங்கை,இந்தியா,மோடி,சுப்ரணியசுவாமி,நீதிமன்றம்,தீர்ப்பு..???

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா இற்கு வழங்கப்பட்ட தீர்ப்பை யாருமே கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவில்லை.தமிழகத்தையே அந்தத் தீர்ப்பு ஒரு கனம் உலுக்கியது என்றால் மிகையாகாது என்றே கூற வேண்டும்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மீது வழக்குத் தாக்கல் செய்து பல வருடம் கடந்த பின்பு இத் தீர்ப்பு வழங்கப்பட்ட போதிலும்,இத் தீர்ப்பு என்னவோ?எடு பிடி என வழங்கப் பட்டது போன்றே அவதானிக்க முடிகிறது. ஜெயலலிதா இற்கு வழங்கப்பட்ட தண்டனைக்கான நேர…

Read More

புனித நகரான கர்பாலாவில் குண்டுவெடிப்பு: 16 பேர் பலி

ஈராக் தலைநகர் பாக்தாத்திலிருந்து தெற்கே 90 கி.மீ தொலைவில் உள்ள கர்பாலா நகரில் நடத்தப்பட்ட மூன்று கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 16 பேர் பலியானார்கள். புனித நகரமான கர்பாலாவில் அரசு அலுவலகங்கள் அருகே உள்ள வணிக பகுதிகள் மற்றும் வாகன நிறுத்தும் இடம் ஆகியவற்றில் இந்த கார் குண்டுகள் வெடித்ததாக காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதில் 41 பேர் காயமடைந்ததாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பற்றிய எண்ணிக்கையை மருத்துவ…

Read More

பரபரப்பாகும் அரசியல் களம்- அடுத்தடுத்து பங்காளிக் கட்சிகளை சந்திக்கும் மஹிந்த

ஜனாதிபதித் தேர்தல் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறுவது உறுதியாகியுள்ள நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசின் பங்காளிக் கட்சிகளுடன் அடுத்தடுத்து தொடர் பேச்சுவார்த்தைகளை நடத்திவருகின்றார். கடந்த வௌ்ளிக்கிழமை அமைச்சர் விமல் வீரவங்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் பிரதிநிதிகளுடன் சந்திப்பை நடத்திய ஜனாதிபதி தலைமையிலான ஆளும் கூட்டணி இன்று செவ்வாய்க்கிழமை ஜாதிக ஹெல உறுமயவுடன் பேச்சு நடத்தவுள்ளது. அத்துடன் எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை பிரதியமைச்சர் திகாம்பரம் தலைமையிலான தேசிய தொழிலாளர் சங்கத்தின்…

Read More

இலங்கை தேர்தலை கண்காணிக்க தயார் – ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலயம்

இலங்கையில் நடைபெறவுள்ள தேசிய தேர்தலை கண்காணிக்க விசேட குழுவொன்றை அனுப்ப தயார் நிலையில் இருப்பதாக ஆசியாவின் தேர்தல் கண்காணிப்பு வலயம் தெரிவித்துள்ளது. அதன்படி 30 பேர் கொண்ட குழுவை இலங்கைக்கு அனுப்ப தயார் என ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலயம் அறிவித்துள்ளது. இதேவேளை, இதுகுறித்து சர்வதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

Read More

ஐ.எஸ்க்கு எதிராக போரிட கூடுதலாக 200 ராணுவ வீரர்கள் ஆஸ்திரேலியா அனுப்புகிறது

ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் போராலிகளுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் ஈராக் ராணுவ வீரர்களுக்கு உதவுவதற்காக மேலும் 200 சிறப்பு அதிரடிப்படை வீரர்களை அனுப்ப ஆஸ்திரேலியா திட்டமிட்டு உள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள பல்வேறு நகரங்களை ஐ.எஸ்.ஐ.எஸ். போராலிகள் கைப்பற்றியுள்ளனர். அத்துடன், சிரியா எல்லையை ஒட்டிய குர்தீஷ் பிராந்தியத்தில் உள்ள பல்வேறு எண்ணெய் கிணறுகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அத்துடன் சிரியாவின் கோபென் நகரம் உள்ளிட்ட பல்வேறு…

Read More

2015 பட்ஜட் 24 இல் சபையில் சமர்ப்பிப்பு: விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் அமுல்

வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் பாராளுமன்றத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்று (20) பாராளுமன்றத்தில் அறிவித்தார். எதிர்வரும் 23 ஆம், 24 ஆம் திகதிகளில் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வறைகள், அலுமாரிகள் மற்றும் பாராளுமன்ற கட்டடத் தொகுதியின் அனைத்துப் பகுதிகளும் பாதுகாப்பு சோதனைக்குட்படுத்தப் படவிருப்பதாக அவர் கூறினார். வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் தினமான வெள்ளிக்கிழமை பாராளுமன்ற வளாகத்துக்குள் வாகனங்கள் உள்நுழைவது தடுக்கப்படுவதுடன் பாராளுமன்ற…

Read More

மஹிந்தவுக்கு ‘பாரத ரத்னா’ விருது – சுப்பிரமணியன் சாமி

புதுடில்லி  பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறுகையில், இலங்கை அதிபர் ராஜபக் ஷே, விடுதலைப் புலிகள் அமைப்பை ஒழித்து கட்டியவர். இதன்மூலம், நம்முடைய உள்நாட்டு பாதுகாப்புக்கு, பெரியஅளவில் அவர் உதவியுள்ளார். அவரின்இந்த பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், அவருக்கு, ‘பாரத ரத்னா’ விருதை, மத்திய அரசு அளிக்க வேண்டும். இதுதொடர்பாக, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்றார்.

Read More

பாராளுமன்றத்தில் சஜித் பிரேமதாஸ ஆவேசம்!

ஜெனீவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தை புனர்நிர்மாணம் செய்வதற்கான ஒப்பந்தத்தை புலிகள் அமைப்பின் ஒருவருக்கு வழங்கியமை தேசப்பற்றா? தேசத்துரோகமா? என பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். ஜெனீவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தை புனர்நிர்மாணம் செய்வதில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் (20-10-2014) பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

Read More

ஆட்சியமைத்தால் அரச சேவையாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பளம் அதிகரிப்பு – ரணில்

ஐக்கிய தேசிய கட்சியின் கீழ் அரச சேவையாளர்களுக்கான வேதனம் 10 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்படும் என எதிர் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கோட்டை தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பொன்று நாவல பிரதேசத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார். இலங்கையில் கைத்தொழில் துறையை மேம்படுத்துவதே ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கையாகவுள்ளது. உலக சந்தையில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம் அல்லது வீழ்ச்சியடையலாம், ஆனால் தொழில் புரியும் வர்க்கத்தின் வேதனம் அதிகரிக்கப்பட வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Read More