Headlines

வட மாகாணசபைத் தீர்மானம் அரசியலமைப்புக்கு முரணானது- அரசாங்கம்

வட மாகாணசபைத் தீர்மானம் அரசியலமைப்புக்கு முரணானது என அரசாங்கம் அறிவித்துள்ளது. வடக்கில் இராணுவத்தின் பிடியிலுள்ள பொதுமக்களின் காணிகளை இந்த வருட இறுதிக்குள் மீள கையளிக்கவேண்டும் என்று வட மாகாண சபையில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம் அரசியலமைப்புக்கு முரணானது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இதற்கு முன்னரும் வட மாகாண சபையில் யாப்புக்கு முரணான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பிற்காகவே தனியார் காணிகள் சுவீகரிக்கப்படுவதாகவும் தேசிய பாதுகாப்பு விடயத்தில் எதுவித இணக்கப்பாடும் கிடையாது என…

Read More

கொழும்பிலிருந்து கண்டிக்கு அதிவேக பாதை – 19 ஆம் திகதி நிர்மாணப்பணிகள் ஆரம்பம்

கொழும்பு – கண்டி அதிவேக பாதையின் முதல் கட்ட நிர்மாணப்பணிகள் எதிர்வரும் 19ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளன. அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இதனை தெரிவித்துள்ளார். இதன் முதற்கட்ட பணிகள் பொத்துஹர-ரம்புக்கன மற்றும் ரம்புக்கன-கலகெதர இடையே ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இலங்கையைச் சேர்ந்த எட்டு ஒப்பந்தக் காரர்களுக்கு இந்த வீதி நிர்மாணப்பணி கையளிக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More

ஜனாதிபதி தேர்தல் நெருங்குகிறது – அதிபர், ஆசிரியர்களுக்கு அடித்துள்ள அதிர்ஷ்டம்

இலங்கையின் அனைத்து அதிபர் ஆசிரியர்களின் சேவை தொடர்பான பிரச்சினைகள் அனைத்தும் எதிர்வரும் ஜனவரி மாதம் தீர்க்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அலவ்வ ஹும்புலுவ மத்திய மஹா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள மஹிந்தோதய தொழிநுட்ப கூடத்தை மாணவர்களுக்கு கையளிக்கும் இன்றைய நிகழ்விலேயே இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மேலும், இரண்டு லட்சத்து 20ஆயிரம் ஆசிரியர்களின் நியமனம், சம்பள பிரச்சினை ஆகியவற்றை உடனடியாக தீர்க்க நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி கல்வியமைச்சு மற்றும் மாகாண சபைக்கு கீழ் சேவை புரியும் அனைத்து…

Read More

காத்தான்குடியில் மாதிரி பலஸ்தீன் அல் அக்ஸா பள்ளிவாயல்

பழுலுல்லாஹ் பர்ஹான் இலங்கையில் கடந்த முப்பது வருட காலமாக இடம்பெற்றுவந்த கொடூர யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததன் நினைவாக இலங்கை அரசாங்கத்தினால்; பலஸ்தீன் அல் அக்ஸா பள்ளிவாயல் வடிவில் காத்தான்குடியில் மிகப் பெரிய ஜூம்மா பள்ளிவாயல் ஒன்று துரிதகெதியில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. புதிய காத்தான்குடி முஹைதீன் பெரிய ஜூம்மா பள்ளிவாயல் இருந்த இடத்தில் துரிதகெதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இப் பள்ளிவாயலின் கட்டுமானப் பணிகளை சவூதி அரேபிய நாட்டின் அரச பிரதிநிதி யஹ்யா பின் அப்துல்லாஹ் அஸஸூஹைரீ,மட்டக்களப்பு மாவட்ட…

Read More

வடக்கு முஸ்லிம்களின் 25 வருட பலவந்த வெளியேற்ற நினைவும், நூல் வெளியீடும்

முகுசீன் ரைசுதீன் ஆசிரியர் அவர்கள் எழுதிய “இலங்கையின் அரசியல் முறைமை” எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று புதன் கிழமை மாலை 09-10-2014 அரசியல் பிரமுகர்கள், விசேட பிரதிநிதிகள் மற்றும் முசலி கல்விச் சமூகத்தின் பங்குபற்றுதலுடன் முசலி தேசிய பாடசாலை விழா மண்டபத்தில் இனிதே இடம்பெற்றது. அஷ்ஷைக் எகேஎம் சியாத் நளீமி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முசலி பிரதேச சபை தவிசாளர் தேசமான்ய W M எகியான் அவர்களும் கௌவ்ரவ அதிதிகளாக பொறியியலாளர் A…

Read More

அரசியல்வாதியாக வர வேண்டும் – மலாலா

அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பாகிஸ்தானை சேர்ந்த பெண் கல்விப் போராளி மலாலா யூசுப்சாய் லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது, மிக இளம்வயதில் நோபல் பரிசைப் பெறுவது எனக்கு பெருமையாக இருக்கிறது. இந்த பரிசை கைலாஷ் சத்யார்த்தியுடன் பகிர்ந்துகொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. சத்யார்த்தியின் பணிகள் எனக்கு தூண்டுகோலாக இருந்தன. ஒவ்வொரு குழந்தையும் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பதே எனது விருப்பம். தங்கள் உரிமைகளுக்காக அவர்கள் எழுந்து நிற்க வேண்டும். நான் நோபல் பரிசை பெறும்போது இந்திய…

Read More