Headlines

2015 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் 24 இல்

2015 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் எதிர்வரும்  24ஆம் திகதி பாராளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது. பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே மேற்கண்ட முடிவு எட்டப்பட்டுள்ளது. இதன்படி வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகள் மீதான இரண்டாம் வாசிப்பு ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி  முதல் ஒக்டோபர் 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. வரவு – செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் ஒக்டோபர் 31ஆம் திகதி முதல் நவம்பர்…

Read More

தனியார் பாடசாலை மாணவர்கள் அரச பாடசாலைகளில் உயர்தரம் கற்கலாம்

தனியார் சர்வதேச பாடசாலைகளில் கல்வி பொதுதராதர சாதாரண தரத்தில் சித்தியெய்தியவர்களை அரசாங்க பாடசாலைகளில் கல்விப் பொதுத் தராதர உயர்தரத்துக்கு அனுமதிப்பது குறித்த சுற்று நிருபம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் குறித்த பிரச்சினை இந்த வாரத்தில் கடும் வாக்குவாதங்களுக்கு உட்படும் பிரச்சினையாக இருக்கும் என்று கல்வி அமைச்சின் தரப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இந்த சுற்று நிருபத்தை உடனடியாக அனுப்புமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவிற்கு கட்டளையிட்டுள்ளார். எனினும் கடந்த…

Read More

மோடியை சந்திக்கப் போகும் பொதுபல சேனா

13ஆவது திருத்தத்தின் உள்ளடக்கம் தெரியாததன் காரணமாக அதனை அமுல்படுத்துமாறு பிரதமர் மோடி அழுத்தம் கொடுக்கின்றார் என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அதிகாரப் பரவலாக்கலை ஆதரிக்கின்றோம். ஆனால், இந்தியாவினால் பலாத்காரமாகத் திணிக்கப்பட்ட 13ஆவது திருத்தி எதிர்க்கின்றோம். இதனால் இலங்கைக்கும் மக்களுக்கும் எதுவிதமான நன்மையும் கிடைக்கவில்லை. இன்று நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் குறித்து பெரிய குழப்பங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக எதிர்க்கட்சிகள் தமது வேட்பாளர் யார் என்பது குறித்தே இன்னும் முடிவு…

Read More

நான் எதிர்பார்த்தது போலவே ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு விட்டது: சுப்பிரமணியன் சுவாமி

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது குறித்து நான் ஆச்சரியப்படவி்ல்லை. இது நான் எதிர்பார்த்தது தான். காலையில் எனது ரிவிட்டர் வலைத்தளத்திலும் கூட இதனைத்தான் பதிவு செய்திருந்தேன். நான் கணித்தது போலவே, ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அரசு வழக்கறிஞருக்கு மட்டும்தான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கும். ஏனென்றால், ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க அவர்தான் எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், அதனை அவர் செய்யாதது…

Read More

ராஜபக்ஷ படையணியைத் தோற்கடிப்பதற்கு ஒன்றிணைய வேண்டும்: ரணில் விக்ரமசிங்க

ஊடகபிரிவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான படையணியைத் தோற்கடிப்பதற்காக அரசாங்கத்துக்கு எதிரான சக்திகள்  அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊவா மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஹரின் பெர்னாண்டோவிடம் ஜனாதிபதி…

Read More

இன்று சந்திரகிரகணம்!

சந்திரகிரகணம் இன்று பிற்பகல் 1.46க்கு ஆரம்பித்து இரவு 7.04க்கு முடிவடையவுள்ளது. எனினும் இலங்கையில் உள்ளோர் இந்த கிரகணத்தின் இறுதிப் பகுதியை மாலை 6 மணிமுதல் 6.03 மணி வரையிலான காலப்பகுதியில் மாத்திரமே பார்க்கமுடியும். எனினும் முழுமையான சந்திரகிரகணத்தை வடஅமெரிக்கா, கனடா, நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய மக்களால் பார்க்க முடியும். இதேவேளை எதிர்வரும் 24ஆம் திகதியன்று சூரியகிரகணம் பிற்பகல் 1.08 இலங்கை நேரப்படி தென்படத்தொடங்கும். எனினும் இந்த சூரியக்கிரகணம் இலங்கைக்கு தென்படாது. கனடா மற்றும் அமரிக்காவுக்கே இது முழுமையாக…

Read More

சிரியாவின் 3 மாவட்டங்களை IS கைப்பற்றி தமது கொடியை பறக்க விட்டுள்ளனர்

கடந்த 3 கிழமைகளாக சிரியாவின் முக்கிய எல்லை நகரமான கொபானே இனைக் கைப்பற்றும் நோக்கில் கடும் சண்டையில் ஈடுபட்டு வரும் IS போராளிகள் வசம் கொபானே நகர் வீழ்ந்து விடும் அபாயம் உள்ளதென   துருக்கி எச்சரித்துள்ளது. மேலும் கொபானே IS வசம் வீழ்ந்து விட்டால் அது IS களுக்கு ஒரு முக்கிய வெற்றியாக கருதப் படும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.  செப்டம்பர் மத்தியில் இருந்து கொபானே நகரைக் கைப்பற்ற நடந்த கடுமையான மோதல்களில் இதுவரை 412…

Read More

த.தே.கூ குதர்க்கம் பேசி மக்களை ஏமாற்றி வருகின்றது: டக்ளஸ்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குதர்க்கம் பேசியும், மக்களை ஏமாற்றியும் தமது சுயலாப அரசியலை முன்னெடுத்து வருவதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இந்நாட்டின் தேசிய பிரச்சினைக்கு உள்நாட்டிலேயே தீர்வு காணப்பட வேண்டும். இதைவிடுத்து வெளிநாடுகளின் உதவிகளை பெற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஒருபோதும்…

Read More

உலக குடியிருப்பு தின தேசிய மாநாடு!

அஸ்ரப் ஏ. சமத் உலக குடியிருப்பு தின தேசிய மாநாடு (06) கொழும்பு சுகாதாச விளையாட்டு உள்ளக அரங்கில் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வின்போது தேசிய வீடமைப்பின் கொள்கைப் பிரகடணம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் அமைச்சர் விமல் வீரவன்ச கையளித்தார். அத்துடன் உலக குடியிருப்பு தினம் பற்றி பாடசாலை மாணவர்களுக்கிடையில் மும்மொழிகளிலும் நடாத்திய போட்டிகளில் வெற்றிபெற்ற முதலாம் இடத்தை பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதியினால் விருதுகளும் பணப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

Read More

மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நவாஸிற்கு நிந்தவூரில் மரியாதை

சுலைமான் றாபி மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட ஏ.எச்.டி.நவாஸிற்கு அவரது சொந்த ஊரான நிந்தவூரில் பாராட்டி கௌரவிக்கும் “மண்ணிண் மகுடம்” எனும் கௌரவிப்பு விழா இன்று (07.10.2014) செவ்வாய்க்கிழமை பி.ப. 4.00 மணிக்கு நிந்தவூர் ஜும்ஆபள்ளிவாசல் சதுக்கத்தில் இடம்பெற்றது. இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் எச்.எம். அப்துல் சத்தார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ரி. ஹசன் அலி, பைசால் காசிம், மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப்…

Read More

டெங்குக் காய்ச்சலால் 22 வயது முஸ்லிம் பெண் வபாத்(கம்பளை)

எம்.எம்.எம்.  ரம்ஸீன் கம்பளையில் டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட இளம் முஸ்லிம் குடும்பப் பெண்னொருவர் நேற்று 07.10.2014 உயிரிழந்துள்ளார். உடுநுவர வட்டதெனியவை சேர்ந்த இவர் கம்பளை ஆண்டியாகடவத்தை பகுதியில் திருமணம் முடித்து வசித்து வந்துள்ளார். கம்பளை போதனா வைத்தியசாலையில் கடந்த வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்ட பாத்திமா நஸ்லூன் என்ற (22 வயது) இப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரின் சடலம் கம்பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டு விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதேவேளை கம்பளை பகுதியில் கடந்த சில வாரங்களாக மழை பெய்த நிலையில் மீண்டும்…

Read More

ஐக்கிய தேசிய கட்சியுடன் கலந்துரையாட தயார் – ஞானசார

ஜனாதிபதி பொது வேட்பாளர் யார் என்பது தொடர்பில் உறுதியாக அறிவிக்கும் பட்சத்தில், ஐக்கிய தேசிய கட்சியுடன் கலந்துரையாட தயார் என பொது பல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது. பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இதனை தெரிவித்துள்ளார். பொதுபல சேனா அமைப்புடன் கலந்துரையாட தயார் என ஐக்கிய தேசிய கட்சியினால் வெளியிடப்பட்ட கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இனத்தை நோக்காக கொண்ட அரசியல் கட்சிகள் நாட்டினுள் இருப்பதன் காரணமாக, சிங்கள…

Read More