Headlines

கிறீன்காட் விஸாவுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

கிறீன்கார்ட் என பரவலாக அறியப்படும் பல்வகைத்தன்மை விஸா விற்கான 2016ஆம் ஆண்டு லொத் தர் குலுக்கலுக்கான விண்ணப்பங்களை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இன்று இரவு 9.30 முதல் நவம்பர் மூன்றாம் திகதி இரவு 9.30 மணிவரை ஏற்றுக் கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை குறித்த காலப்பகுதியில் www.dvlottery.state.gov ஆலிஸ என்ற இணை யத்தளத்தினூடாக மாத்திரமே சமர்ப் பிக்கமுடியும். இந்த கிறீன்கார்ட் விஸா விண்ணப்பம் தொடர்பான விபரங்களை usvisas.state.gov என்ற இணையத்தளத்தில் Diversity Visa என்ற பகுதியில்…

Read More

தேர்தலுக்கு தயாராகுமாறு சு.கவினருக்கு பணிப்புரை

கே.பாரதிராஜா ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான எதிர்பார்ப்புகளால் கொழும்பு அரசியல் களம் பரபரப்படைந்துவரும் நிலையில், தேசிய தேர்தல் ஒன்றுக்குத் தயாராகுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்க ளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச­ பணிப்புரை விடுத்துள்ளார் என அரச உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் ஆகிய இரண்டுக்கும் அரசு எப்போதும் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ச தெரிவித்துள்ளார். இதேவேளை, அண்மைக்காலமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிரேஷ்ட உறுப்பினர்களிடையே இடம்பெற்றுவரும் கருத்து…

Read More

மஹிந்தவின் வத்திக்கான் விஜயத்துக்கு பிறகே ஜனாதிபதித் தேர்தல் ஆலோசனை

அ.அருண் பிரசாந்த் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­சவின் வத்திக்கான் விஜயத்திற்கு பின்னரே ஜனாதிபதித் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படும் என அமைச் சரவையின் பேச்சாளரும் ஊட கத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வல்ல நேற்று தெரிவித்தார். அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து விளக்கமளிக்கும் விசேட ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு ஊடகவிய லாளர்கள் வினவிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், அனைவருக்கும் 25 வீத மின்கட்டண குறைப்பையும் இதன் போது அமைச்சர்…

Read More

ரணிலிடம் நாம் கற்க வேண்டும் – மஹிந்த தெரிவிப்பு

கே.பாரதிராஜா தோற்றாலும் வெற்றிபெற்று விட்டோம் என்று எப்படிக் கூறுவது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து கற்றுக் கொள்ளவேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ நகைச்சுவையாக தெரிவித்துள்ளார். ஊவா மாகாணத் தேர்தலில் தாம் வெற்றிபெற்றுவிட்டதாக எதிர்க்கட்சி செய்த பிரசாரத்தை அடிப்படையாகக் கொண்டே ஜனாதிபதி மஹிந்த இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊவா மாகாண ஆளுந்தரப்பினர் பதவிப் பிரமாண நிகழ்வில் உரையாற்றியபோதே மேற்கண்ட வாறு தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ மேலும் தெரிவித்தவை வருமாறு, வட…

Read More

ஊவாவின் முதலமைச்சராக ­சீந்திர சத்தியப்பிரமாணம்

ஊவா மாகாண சபையின் முதலமைச்சராக ­சீந்திர சேனாநாயக்க நேற்றுக்காலை 9.14 மணிக்கு சுப வேளையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். அத்துடன் ஆளுந்தரப்பு உருப்பினர்களும் பதவிப் பிரமாணம் மேற்கொண்டனர். இதேவேளை, ஊவா மாகாண அமைச்சர்கள் நால்வரினதும் பதவிப்பிரமாணம் பிற்போடப்பட்டுள்ளது. வெளிநாடு சென்றுள்ள ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த நாடு திரும்பியதையடுத்தே இவர்களுக்கான பதவிப்பிரமானத்தை மேற்கொள்ள அரசு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்றுக்காலை இடம்பெற்ற…

Read More

பிணை மனு மீண்டும் ஒத்திவைப்பு- ஜெயலலிதா தொடர்ந்து சிறையில்

ஜெயலலிதாவின் சிறப்பு மனு மீதான விசாரணையை ஒக்டோபர் மாதம் 7-ம் திகதிக்கு ஒத்திவைத்து கர்நாடக உயர் நீதிமன்றம். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் ஜெயலலிதாவின் பிணை மனு மீதான விசாரணை இன்று 10.30 மணியளவில் நடைபெற்றது. நேற்று இரவு அரசு சிறப்பு வழக்கறிஞராக அவசரம் அவசரமாக நியமிக்கப்பட்ட பவானி சிங் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்து மனு செய்தார். இதை ஏற்ற நீதிபதி ரத்னகலா, ஒக்டோபர் 7ம் திகதிக்கு ஒத்திவைக்க…

Read More

சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம் இன்று

சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம் நாடளாவிய ரீதியில் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.முதியோரை மேன்மைப்படுத்தும் வகையில் கடந்த 1990ஆம் ஆண்டில் அக்டோபர் முதலாம் திகதியை உலக முதியோர் தினமாக ஐ.நா. அறிவித்தது.முதியோர் சுதந்திரம், பங்களிப்பு, வயதானவர்களை மதித்தல் போன்றவை உலக முதியோர் தினத்தின் முக்கிய நோக்கமாகும்.உலக மக்கள்தொகையில் 10ல் ஒருவர் 60வயதுக்கு மேற்பட்டவராக இருக்கிறார். இது 2050 ல் ஐந்தில் ஒருவராகவும், 2150ல் மூன்றில் ஒருவராகவும் இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன

Read More

இந்திய கற்கைநெறி வழிகாட்டல் கருத்தரங்கு

இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கான இந்திய கற்கை நெறி தொடர்பான கருத்தரங்கும்,ஆலோசனை வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.இன்று காலை 10மணியளவில் யாழ்.மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.இந்த நிகழ்வில் இந்திய கற்கை நெறியினை யாழ்ப்பாணத்திலுள்ள மாணவர்களுக்கு பயிற்றுவிப்பதுடன் அவர்களும் இந்தியாவிற்குச் சென்று கற்கை நெறியை மேற்கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.இந்திய அரசு எட்சில் நிறுவனத்தின் அனுசரணையின் கீழ் இந்த கற்கை நெறி முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.மேலும் இந்நிகழ்விற்கு இந்திய பதில் துணைத் தூதுவர் எஸ்.டி மூர்த்தி கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

தொழில்துறை வளைய உள்கட்டமைப்பு வசதிகளுக்கு 460, 000 அமெரிக்க டொலர்

தென்மாகாணத்தில் பாரிய கைத்தொழில்பேட்டையாக விளங்கும் ‘பட அத’ (Bata-Ata Industrial Zone) தொழில்துறை வளையம் உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய உடனடி மெக வசதிகளை பெற்றுக்கொண்டுள்ளது. தங்காலையில் அமைந்துள்ள இத்தொழில்துறை வளையத்திற்கு கடந்த 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை திடீர் விஜயத்தினை மேற்கொண்ட கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவ்வயையத்தில் நீண்ட காலமாக நிலவிவந்த குறைப்பாடுகளை ஆராய்ந்து வந்ததுடன் அவற்றை உடனடியாக தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். சில குறைப்பாடுகளை அமைச்சர் 24 மணிநேரத்துக்குள் தீர்த்து…

Read More

சுற்றுலா பயணிகள் கையேடு வெளியீடு

யாழ். மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கான  கையேடு  இன்று காலை 10.30 மணிக்கு யாழ். மாவட்ட செயலகத்தில் வெளியிட்டுவைக்கப்பட்டது.இது தொடர்பாக கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம்,யாழ். மாவட்டத்தின் சுற்றுலாத்துறை அபிவிருத்திக்காக  அடையாளம் காணப்பட்ட சுற்றுலா இடங்கள், அவசர தொலைபேசி எண்கள் மற்றும் பாதை விபரங்கள்  அடங்கிய முதலாவது கையேடு இன்று வெளியிட்டுவைக்கப்படுகிறது.வெளிமாவட்ட மக்களின் சிரமங்களை நீக்குவதற்காகவே இந்த கையேடு வெளியிடப்படுகிறது.இந்தக் கையேட்டில் தெரிவு செய்யப்பட்ட 52 இடங்கள் மட்டுமே காணப்படுகின்றன….

Read More