Headlines

சூரியன் இலங்கைக்கு மேலாக உச்சம் கொடுக்கும் தினங்கள்

க.சூரியகுமாரன், வளிமண்டல ஆராய்ச்சித் திணைக்களம்: வடஅரைக்கோளத்திலிருந்து அதன் அரைக்கோளம் நோக்கிய சூரியனின் நகர்வானது இலங்கைக்கு மேலாக இம்மாதம் ஓகஸ்ட் 28ம் திகதி முதல் செப்தெம்பர் 07ம் திகதி வரை காணப்படுகிறது. இந்தக் காலப்பகுதியில் சூரியன் இலங்கைக்கு மேலாக அதி உச்சம் கொடுக்கும். இதன்படி இலங்கையின் பின்வரும் நகரங்களை இணைக்கும் அகலக்கோட்டின் வழியே தரப்பட்டுள்ள நேரங்களில் சூரியன் அதிஉச்சம் கொடுக்கும்.

Read More

இலங்கையிலும், மியன்மாரிலும் புத்தருக்கு துரோகம் இழைக்கப்படுகிறது – பான் கீ மூன்

GTN இலங்கையில் சிறுபான்மை மதங்கள் மீதான ஒடுக்குமுறைகள் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் கவலை வெளியிட்டுள்ளார். பௌத்த கடும்போக்குவாத நடவடிக்கைகள் கவலையளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளில் பௌத்த கடும்போக்குவாதம் அண்மைக்காலமாக தலைதூக்கியுள்ளமை வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார். இலங்கையில் சிறுபான்மை மதச் சமூகத்தவர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். அனைத்து இன மக்களினதும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசாங்கத்தினதும் மதத் தலைவர்களினதும்…

Read More

ஆஸாத் சாலி இனவாதம் பேசினார் – லாபிர் ஹாஜியார்

(JM.Hafeez) சாதாரண குடிமகனான என்னை அரசியல் மூலம் உயர்த்திவைக்கக் காரணம் நான் வாழும் சூழலாகும், வேட்பாளர்கள் அதிகமான பணத்தை தேர்தல்களுக்காகச் செலவிடும் துர்ப்பாக்கியம் எமது மாகாண சபை முறையில் உள்ளது என்று மத்திய மாகாண சபை அங்கத்தவர் ஜெய்னுல் ஆப்தீன் தெரிவித்தார். கண்டியிலுள்ள தனது காரியாலயத்தில் நடத்திய ஊடக சந்தப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது-  கண்டி மாவட்ட ஐ.தே.க.யின் மாகாண சபை அங்கத்தவர் இரு முறை தான் தெரிவு செய்யப்ட்டதாகவும் தனது…

Read More

குளத்தில் மூழ்கி மூன்று மாணவிகள் உயிரிழப்பு (படங்கள் இணைப்பு)

கிளிசொச்சி, கிருஸ்ணபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவிகள் மூவர் குளத்தில் குளிக்கச் சென்ற நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த துயரச் சம்பவம் 30-08-2014 சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குளத்தில் குளிப்பதற்காக நான்கு பெண்கள் சென்றதுடன் அதில் மூவர் உயிழந்துள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், ஒருவரை இதுவரை காணவில்லை எனவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்துள்ளன. க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு இந்த வருடம் எதிர்கொள்ளவுள்ள மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். கிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த பா.தாட்சாயினி (வயது…

Read More

பள்ளிவாசல்களில் அரச ஆதிக்கம், முஸ்லிம்களின் கட்டமைப்பினை சீர்குலைக்கும் நடவடிக்கை – அஸாத்சாலி

இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் இருக்கின்ற காரணத்தினால்தான் தமிழ் மக்களின் ஏக பிரதி நிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பினை அழைத்து இந்தியப்பிரதமர் நரேந்திரமோடி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என்று மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத்சாலி தெரிவித்தார். 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினை அமுல் படுத்துவது தொடர்பில் பிரதமர் மோடி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு உறுதியளித்துள்ள நிலையில் அரசாங்கத்தின் ஒப்பந்தக்காரராக செயற்பட்டுக்கொண்டிருக்கும் சுப்பிரமணிய சுவாமி 13 ஆவது திருத்தம் 90 வீதம் அமுல்படுத்தப்பட்டதாக கூறியது முற்றிலும் பொய்யானது…

Read More

ஒரு பள்ளிவாசலின் சொத்தில் 5 ஸ்டார் ஹோட்டல் கட்டியுள்ளார்கள்: உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சுப்

அஸ்ரப் ஏ. சமத்: சட்டத்தரணி ஏ.ஜி.எச். அமீன் இதுவரை 17 சட்டத்துறை புத்தகங்களை மும்மொழிகளிலும் எழுதியுள்ளார். வெள்ளவத்தை மூர் இஸ்லாமிய கலாச்சார மண்டபத்தில் ஆங்கில மொழி மூலமான அல் அமீன் லோ றிபோட் நூல் இன்று வெளியீட்டு வைக்கப்பட்டது. இந் நிகழ்வு ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தலைமையில் நடைபெற்றது. நீதியமைச்சர் ரஊப் ஹக்கீம், உயர் நீதிமன்ற நீதிபதி சலீம் மர்சுப் நூலாசிரியர் ஏ.ஜி.எச். அமீன் மற்றும் சட்டத்தரணி பசீர் அஹமட் ஆகியோறும் உரை நிகழ்தினார்கள். நூலின்…

Read More

நாட்டின் பாதுகாப்புக்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை தேவை: டி.எம்.ஜயரட்ண

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை இல்லை என்றால் நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கட்டுக்குள் கொண்டு வந்து பாதுகாப்பாக வைக்க முடியாது போகும். எனவே, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைய அவசியமானது என்று பிரதமர் டி.எம்.ஜயரட்ண தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர், “நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்போம்” என்பவர்களுக்கு கட்டுக்கட்டாக (அமெரிக்க) டொலர்கள் கிடைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “சிலர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை…

Read More

இலங்கையின் சமூக பதற்றம் ஐ.நாவின் கவனத்தில் உள்ளது

சமாதானத்துக்கான பாலங்களை கட்டியெழுப்ப “சீரிய சமூக இணையம்” போன்ற அமைப்புக்கள் முக்கிய பங்கை வகிப்பதாக ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்தோனேசியா பாலியல் சீரிய சமூக இணையத்தின் மாநாடு நடைபெற்று வருகிறது. இதன்போது உரையாற்றிய நாடுகளின் இணையம் அமைப்பின் உயர் பிரதிநிதி நாஸிர் அப்துல்லாசிஸ் அல் நாஸர், தமது அமைப்பு வன்முறை தடுப்பு மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி அபிவிருத்திக்கு முனைப்புக்காட்டுவதாக குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பேன் கீ மூனும் பங்கேற்றார்.

Read More

மலேசியன் ஏர்லைன்ஸில் பணியாற்றிய 6000 பேருக்கு வேலை இழப்பு!

இவ்வருடம் அடுத்தடுத்து இரு மலேசியன் ஏர்லைன்ஸின் சர்வதேச பயண விமானங்கள் விபத்தில் சிக்கி அவற்றில் பயணித்த அனைவருமே உயிரிழந்து இருந்ததை அடுத்து மலேசியன் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் மிகவும் நட்டத்துடன் இயங்குவதால் சமீபத்தில் இந்நிறுவனத்தில் பணியாற்றிய 6000 பேரை வேலையை விட்டு நீக்கி வீட்டுக்கு அனுப்பியுள்ளது அந்நிறுவனம். மார்ச் 8 ஆம் திகதி கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் சென்ற MH370 என்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் மாயமாகி இதுவரை ஒரு சிறிய…

Read More

வினாத்தாள்கள் திருத்துமிடங்களைத் தவிர, அரச பாடசாலைகள் திங்கள் ஆரம்பம்!

க.பொ.த. உயர்தர மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கவுள்ளன. செப்டெம்பர் மாதம் 1ஆம் திகதி திங்கட்கிழமை மூன்றாம் தவணைக்கான கல்வி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட விருப்பதாக கல்வி அமைச்சின் பாடசாலைகள் செயற்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. உயர்தர பரீட்சை விடைத்தாள்களை முதலாவது கட்டமாக மதிப்பீடு செய்யும் மத்திய நிலையங்களாக செயற்படும் 10 பாடசாலைகள் மற்றும் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் மத்திய நிலையங்களாக…

Read More

நீர் நிறைத்து வைக்கப்பட்டிருந்த வாளியில் தலை கீழாக விழுந்து குழந்தை பலி ஏறாவூர் – ஐயங்கேனியில் சம்பவம்

ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: ஏறாவூர் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட ஐயங்கேனி தமிழ் பிரிவில் இன்று மாலை திருமால் பவித்திரன் என்ற பதினெட்டு மாத ஆண் குழந்தை இதனது வீட்டு குளியலறையில் நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் ரக வாளியினுள் தலை கீழாக விழுந்து மூச்சுத்திணறி மரணமாகிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. குளியலறையில் உடுப்புகள் கழுவிக்கொண்டிருந்த இக்குழந்தையின் தாயாரான பிரியா என்பவர் தனது ஒரு மாத பெண் குழந்தைக்கு தாய்ப்பால கொடுப்பதற்காக எழுந்து சென்றபின்னர் இதாயை தேடி…

Read More

அரசாங்கத்துக்கு நாம் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டும் – ரவூப் ஹக்கீம்

அரசாங்கம் சார்பில் எந்தவொரு முஸ்லிம் வேட்பாளர்களும் களமிறக்கப்படாமையானது ஊவா வாழ் முஸ்லிம்களை புறந்தள்ளியிருப்பதை தெட்டத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. எனவே நடைபெறவுள்ள ஊவா மாகாண சபை தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டும் என மு.கா. தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். பதுளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்; இந்நாட்டில் அனைத்து இன மக்களும் பலஸ்தீனத்துக்கு ஆதரவு வழங்கி வரும் நிலையில் பொதுபலசேனா மாத்திரம் இஸ்ரேலுக்கு…

Read More