Headlines

ஜனாதிபதி தேர்தலில் பொதுபல சேனா வேட்பாளர்

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொதுபல சேனா அமைப்பின் சார்பாக ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை தாம் களமிறக்க உள்ளதாக அவ்வமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். சிங்கள பௌத்த மதத்தை அடிப்படையாக கொண்ட இந்த யோசனையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~வுக்கும் எதிர் கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவுக்கும் அறிவிக்க உள்ளதாகவும் அவ்வாறு இந்த யோசனைக்கு அவர்கள் மறுப்பு தெரிவிப்பார்களாயின் தாம் தனியாக வேட்பாளரை களமிறக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். (VK)

Read More

மடு ஆலயத்தில் பறந்தது எமது விமானம் அல்ல ; தெரிவிக்கிறது விமானப் படை

 மன்னார் மடு திருத்தல ஆவணித் திருவிழாவின் போது நேற்று ஆலயத்தின் முற்பகுதியில் வானில் பறந்ததாக கூறப்படும் சிறியரக விமானம் இலங்கை விமானப் படைக்கு சொந்தமானது அல்ல என விமானப்படை  தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விமானப்படைத் தரப்பிற்கு எவ்விதமான தகவல்களும் பதிவாகவில்லை என இலங்கை விமானப்படை பேச்சாளர் அலுவலகத்தின் விங் கொமாண்டர் பத்மன் டி கொஸ்தா தெரிவித்துள்ளார். மடு திருத்தல ஆவணித் திருவிழாவின் திருப்பலி நேற்று காலை ஒப்புக்கொடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த சிறிய ரக விமானம் வானில்…

Read More

சீன ஜனாதிபதி, இலங்கை வருகிறார்

இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங் செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி இலங்கை வருகைதரவுள்ளார். சீன ஜனாதிபதியொருவர் முப்பது வருடங்களுக்கு பிறகு இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசியல் பிரமுகர்களை அவர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதுடன்  நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது கட்டத்தையும் ஆரம்பித்துவைப்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Read More

பௌத்த மதத்தை பாதுகாக்க புதிய அமைப்பு உருவாக்கம்?

ஆளும் கட்சியின் பௌத்த அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இவ்வாறு இணைந்து செயற்படவுள்ளனர். பௌத்த மதத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் புத்திஜீவிகளும் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர். மாநாயக்க தேரர்களின் ஆலோசனை வழிகாட்டல்களின் அடிப்படையில் இந்த அமைப்பு உருவாக்கப்பட உள்ளதாகவும் அவர்களின் வழிகாட்டல்களுக்கு அமைய அமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். பௌத்த மதத்தை பாதுகாக்கும் நோக்கில் சில சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது….

Read More

ஞான­சார தேர­ரிடம் 100 கோடி நஷ்ட ஈடு கேட்­கும் அமைச்சர் ராஜி­த

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரர் அண்மையில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் வெளியிட்ட கருத்துக்களால் தனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் எனவே அதற்கு நஷ்ட ஈடாக ரூபா 100 கோடி வழங்க வேண்டும் எனக்கோரி கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர்  ராஜித சேனாரத்தின தனது சட்டத்தரணி ஊடாக நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளார். அமைச்சர் ராஜித சேனாரத்தின சார்பாக அவரது சட்டத்தரணி சனத்வீரரத்தின இந்த நோட்டீஸை கலகொட அத்த ஞானசார தேரருக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த…

Read More

பாணந்துறையில் பொதுபல சேனா

பாணந்துறை கெஸல்வத்தை திக்கல வீதியில் உள்ள பூர்வராம பௌத்த விகாரையில் பொதுபலசேனாஅமைப்பின் அனுஷ்டான பூஜை நாளை ஞாயிறு பிற்பகல் நடைபெற உள்ளது. இந்நிகழ்வு தொடர்பில் பாணைந்துறையில் சுவரொட்டிகள் மற்றும் பதாதைகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்நிகழ்வுக்கு பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிப்படுகின்றது. முஸ்லிம்கள் செறிந்து வாழும் இப்பிரதேசத்தில் பொதுபலசேனாவின் நிகழ்வு நடைபெறவுள்ளதால்முஸ்லிம்கள் அச்சத்தில் உள்ளதாக பிரதேச முஸ்லிம்கள்  தெரிவிக்கின்றனர். பொதுபல சேனாவின் நிகழ்வு தொடர்பில் பாணந்துறையில் வசிக்கும்  முஸ்லிம்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறு…

Read More

முஸ்லிம் சமுகத்தின் உரிமைகளையும் சொத்துக்களையும் பாதுகாக்கும் தேர்தலே ஊவா தேர்தல்- அமைச்சர் ரிசாத் சூளுரை

முஸ்லிம்களின் உரிமைகளையும் சொத்துக்களையும் பாதுகாக்கும் தேர்தலாகவே ஊவா மாகாண சபைத் தேர்தலை தான் பார்ப்பதாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவிதித்தார்   ஜனநாயக ஐக்கிய முன்னணியின் இரட்டை இலைச் சின்னத்தில் மு.காவுடன் இணைந்து போட்டியிடும் அ.இ.ம.கா வின் தேசியத் தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீன் வெள்ளி ,சனி ஆகிய தினங்களில் மேற்கொண்ட  தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.   மு.கா. , அ.இ.ம.கா இத்தேர்தலில் ஒற்றுமைபட்டதானது நாடு பூராகவும் உள்ள 20 இலட்சம்…

Read More