தென்கொரியாவில் பணியாற்றும் இலங்கையர்களால் அதிக வருமானம்-அமைச்சர் றிஷாத் பதியுதீன்
தென்கொரியாவில் பணியாற்றும் இலங்கையர்களால் அதிக பொருளாதார முன்னேற்றத்தை தமது நாடு அடைந்து வருவதாக இலங்கைக்கான தொன்கொரிய தூதுவர் தெரிவித்துள்ளார். கைத்தொழில் – வாணிபத்துறை அமைச்சர் றிஷாத் பதியுதீனை நேற்று (03.06.2014) அமைச்சில் வைத்து சந்தித்து உரையாடும்போதே தென்கொரிய தூதுவர் மேற்படி கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக உறவு குறித்து இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது. தென்கொரியாவில் பணியாற்றும் இலங்கையர்களின் உழைப்பு எமது நாட்டுக்கு அதிக வருமானத்தையும் பொருளாதார ரீதியாக முன்னேற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவர்களது பனி பாராட்டுக்குரியது. அதற்காக விசேடமாக…
