ஜனாதிபதியிடம் பேசி எமது பிரச்சினைகளை தீர்ப்போம்-அமீர்அலி
முஸ்லீம்களது உள்வீட்டுப் பிரச்சினைகளை தூக்கிக்கொண்டு முஸ்லீம் கட்சியொன்று ஜெனிவாவுக்குச் சென்றுள்ளது. ஆனால் எமக்கென்று ஒரு பிரச்சினை வந்துவிட்டால் அதனை தீர்ப்பதற்கு அல்லது கதைப்பதற்கு எமது கட்சி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடமே செல்வோம். என முன்னாள் அமைச்சரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான அமீர்அலி தெரிவித்தார். மேற்கண்டவாறு நேற்று இரவு மட்டக்குழியில் உள்ள அலி வத்தையில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வேட்பாளர் செனவிரத்தின அவர்களை ஆதரித்து உரையாற்றும்போதே இவ்வாறு அமீர் அலி தெரிவித்தார். தற்போதைக்கே கொழும்பில் பாயிசும், செனவிரத்தினவும்…
