Headlines

சர்வதேச குர்ஆன் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை மாணவனுக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் பாராட்டு

சவூதி அரேபியாவில் இடம் பெற்ற சர்வதேச கிராத் போட்டியில் வெற்றியீட்டி இலங்கைக்கு பெருமையும்,முஸ்லிம் சமூகத்திற்கு கௌரவத்தையும் பெற்றுத் தந்த கொழும்பைச் சேர்ந்த அல்-ஹாபிஸ் முஹம்மத் றிஸ்தி முஹம்மத் றிஸ்கானுக்கு தமது வாழ்த்துக்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு அங்கு சென்றுள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன் முஹம்மத் றிஸ்கானுக்கு தமது வாழத்தினை தெரிவித்துள்ளதாக அமைச்சின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள…

Read More

அடாவடித்தனத்தின் மூலம் எதையும் பெற முடியாது -அமைச்சர் ரிஷாத் பதியுதீன் காட்டம்

வன்னி மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் மக்களின் விருப்பத்தின் படியே தெரிவு செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் அவர்களை புரந்தள்ளி எந்த தீர்மானங்களையும் எடுக்க முடியாது என்றும் கூறினார். வன்னி வசந்தம் என்னும் தொனிப் பொருளில் வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று(2012.12.16) இடம் பெற்ற அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.   வவுனியா அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர,…

Read More

மனித உரிமை அமைப்பின் 4வது ஆண்டு விழா கொழும்பில் இடம் பெற்றுள்ளது

மனித உரிமை அமைப்பின் 4 வது ஆண்டு நிறைவு விழா கொழும்பு இலங்கை மன்றக் கல்லுாரியின் கேட்போர் கூடத்தில் இன்று இடம் பெற்றுள்ளது. அமைப்பின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி எம்.என்.எம்.அஸீம் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக்,அதன் அங்கத்துவத்துவ அடையாள அட்டையினை பெற்றுக் கொண்டுள்ளார்.அதேவேளை பிரதமரின் இணைப்புச் செயலாளர் எஸ்.டி.தர்மசேன பாடசாலை மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை இதன் போது வழங்கினார்.

Read More