இஸ்ரேலின் மிலேச்சத்தனமான தாக்குதலுக்குஅமைச்சர் ரிஷாத் பதியுதீன் கண்டனம்
இன்று சர்வதேச முஸ்லிம் சமூகம் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அடக்கு முறை மற்றும் மனித உணர்வுகளுக்கு அப்பாலான தாக்குதல் சம்பவங்களை தாம் வண்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான றிசாத் பதியுதீன்,இஸ்ரேல் காஸா மீது மேற்கொண்டுவரும் தாக்குதல்களை நிறுத்த சர்வதேச வல்லரசு நாடுகள் முன்வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். பாலஸ்தீன புனித பூமியை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள நிலையில்,அப்பாவி மக்களையும்,குழந்தைகளையும் இலக்கு வைத்து மேற்கொண்டுவரும் தாக்குதல்கள் அப்பட்டமான சர்வதேச மனித உரிமை…
